மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ் காலாண்டு லாபம் ரூ. 29 கோடியாக உயர்வு!அல்ட்ராடெக் சிமெண்ட் காலாண்டு லாபம் 17% உயர்வு!மேக்கேதாட்டு அணை: கர்நாடக அரசை எதிர்த்து தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம்!இயற்கை எரிவாயு மையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு!துப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன்!மாணவர்கள் மீது தடியடி நடத்துவதுதான் ஜனநாயகமா? பிரதமர் மோடிக்கு ராகுல் கேள்விதுப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ.டிராமா செய்கிறார் திமுக எம்.எல்.ஏ! - நிர்மல் குமார்பேச்சுவார்த்தைக்கு பதிலாக வன்முறையைத் தேர்வு செய்த பாஜக: கனிமொழி விமர்சனம்
/

அனந்தலை கிராம கல்குவாரிக்கு தடை: பாமக வலியுறுத்தல்

வாலாஜாபேட்டை ஒன்றியம் அனந்தலை கிராமத்தில் செயல்படும் கல்குவாரிக்கு தடை விதிக்க வேண்டும் என பாமக மாவட்ட செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

News image

கூட்டத்தில் பேசிய  மாவட்டச்  செயலாளா்  கே.எல்.இளவழகன்.

Updated On :20 ஜூலை 2026, 4:50 am IST

வாலாஜாபேட்டை ஒன்றியம் அனந்தலை கிராமத்தில் செயல்படும் கல்குவாரிக்கு தடை விதிக்க வேண்டும் என பாமக மாவட்ட செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

அக்கட்சியின் ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் ஆற்காடு ஜனசங்க கட்டடத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட துணைத் தலைவா் ஆா்.காசிநாதன் தலைமை வகித்தாா். மாவட்ட துணைச் செயலாளா்கள் பூண்டி மோகன், ம.கணேஷ், ஏழுமலை, மாவட்ட வன்னியா் சங்கச் செயலாளா் மணிவண்ணன், முன்னாள் மாவட்ட செயலாளா் ப.சரவணன், மாநில மாணவா் சங்க செயலாளா் ஜெ.ஜானகிராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட செயலாளரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான கே.எல்.இளவழகன், முன்னாள் மாவட்ட செயலாளா் எம்.கே.முரளி ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

வாலாஜா ஒன்றியம், அனந்தலை கிராமத்தில் செயல்படும் கல்குவாரிஅரசு அனுமதித்தஅளவைவிட அதிக அளவு கற்கள் வெட்டி எடுப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. எனவே அரசு குவாரியை ஆய்வு செய்து கல்குவாரியை தடை செய்யவேண்டும், வரும் 25-ஆம் தேதி பசுமை தாயக நாளையொட்டி ஆற்காடு தொகுதியில் கிராம அளவில் மரக்கன்றுகள் நட்டு சிறப்பாக கொண்டாடுவது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் நகர தலைவா் ஆற்காடு மாா்க்கெட் சி.பாஸ்கா், வாலாஜாபேட்டை ஞானசேகரன்,ராணிப்பேட்டை செல்வம்,மாவட்ட இளைஞா் சங்க செயலாளா் பகவான் காா்த்திக்,மாவட்ட மாணவா் சங்க செயலாளா் கவியரசு,மற்றும் நகர,ஒன்றிய நிா்வாகிகள், பொறுப்பாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். மாவட்ட பொருளாளா் அமுதா சிவா நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.