கால்பந்து உலகக்கோப்பையை வென்ற ஸ்பெயின் அணி நேற்று நாடு திரும்பியது. அவர்களுக்கு, மாட்ரிட் நகரில் 20 லட்சம் பேர் முன்னிலையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் ஆர்ஜென்டீனாவை 1 - 0 என்ற கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் அணி இரண்டாவது முறையாகக் கோப்பையைக் கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து, ஸ்பெயின் அணியின் 26 வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் குழு நேற்று நாடு திரும்பினர்.
ஸ்பெயின் பிரதமரின் வாழ்த்து
ஸ்பெயின் வந்தவுடன் அங்குள்ள அரச குடும்பத்தினரையும், பிரதமர் பெட்ரோ சான்செஸையும் அவர்கள் சந்தித்தனர். அவர்களை வாழ்த்தியப் பிரதமர், “உங்கள் ஆட்டத்தின் பாணி, கடும் முயற்சி மற்றும் வெற்றிக்காக வீரர்களுக்கும் பயிற்சியாளர்களுக்கும் நன்றி. உங்கள் விளையாட்டை அனைவரும் மிகவும் ரசித்தோம்” எனக் கூறினார்.
மாட்ரிட் நகரில் ஊர்வலம்
பிரதமரைச் சந்தித்த பின்னர் வீரர்கள் அனைவரும் திறந்தவெளி பேருத்தில் ஏறி மாட்ரிட் நகரின் மையப்பகுதியில் ஊர்வலம் மேற்கொண்டனர். ‘நட்சத்திரங்கள் ஒன்றாக ஜொலிக்கின்றன’ என எழுதப்பட்ட அந்தப் பேருத்தில் வீரர்களின் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன.
நாங்கள் சாம்பியன்கள் என எழுதப்பட்ட சட்டையை அணிந்தபடி, உலகக்கோப்பையை ஏந்திக் காண்பித்தபடி ஊர்வலம் சென்ற வீரர்கள் ரசிகர்களுடன் நடனமாடி மகிழ்ந்தனர்.
பிரதமரின் அரசு இல்லமான மோன்க்லோவா அரண்மனைக்கு அருகிலிருந்து சிபெலஸ் சதுக்கம் வரை மாட்ரிட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க வீதிகள் வழியாக அந்த அணி ஊர்வலம் சென்றது. அவர்களை வரவேற்க கிட்டத்தட்ட 20 லட்சம் மக்கள் கூடியிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிபெலஸ் சதுக்கத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் ஒவ்வொரு வீரராக அறிமுகப்படுத்தப்பட்டனர். அவர்கள் விருப்பத்திற்கேற்ப பாடல்கள் ஒலிக்கப்பட்டது. தனது 25-வது பிறந்தநாளைக் கொண்டாடும் அலெக்ஸ் பேனா, உலகக் கோப்பையுடன் மேடைக்கு வந்தார்.
பின்னர் பயிற்சியாளர் டி லா ஃபுயன்டேவை வீரர்கள் மேலே தூக்கி வீசி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பாடல்கள் இசைக்கப்பட்டு அனைவருடனும் இணைந்து பயிற்சியாளரும் பாடினார். வீரர் போர்ஜா இக்லேசியாஸ் டி.ஜே. (D.J.) ஆகச் செயல்பட, சக வீரர்கள் மேடையில் நடனமாடினர்.
ஸ்பெயின் பாடகிகள் ஐதானா, அனா மெனா மற்றும் லோலா இண்டிகோ ஆகியோர் மேடையில் பாடுவதற்காக அழைக்கப்பட்டிருந்தனர்.
வெற்றி பெற்ற அன்று நடைபெற்ற விருது வழங்கும் விழாவைப் போன்று, ஸ்பெயின் அணி முழுவதுமாக ரசிகர்கள் முன்னிலையில் மீண்டும் உலகக் கோப்பையை உயர்த்திக் காட்டினர்.
தொடர்ந்து சாதிக்கும் ஸ்பெயின்
ரியல் மாட்ரிட் அணி சாம்பியன் பட்டங்களை வெல்லும்போதும் கொண்டாட்டங்களுக்கான பாரம்பரிய இடமான சிபெலஸ் சதுக்கத்தில் இந்த விழாவும் கொண்டாடப்பட்டது.
ஆண்கள் அணிக்கான கோப்பையுடன், 2023-ல் ஸ்பெயின் பெண்கள் அணி வென்ற உலகக் கோப்பை வெற்றியும் சேர்த்து, ஒரே நேரத்தில் இரண்டு கோப்பைகளையும் வைத்திருக்கும் முதல் ஐரோப்பிய நாடாக ஸ்பெயின் உள்ளது.
2010 -ஆம் ஆண்டில் கடன் நெருக்கடி, 20% வேலையின்மை மற்றும் கூடுதல் தன்னாட்சிக்காகப் போராடிய தேசியவாதப் போக்குடைய பிராந்தியங்களால் சூழப்பட்ட ஸ்பெயின், தற்போது அதிலிருந்து முற்றிலுமாக மாறியுள்ளது. பொருளாதாரத்தில் வளர்ச்சி கண்டுள்ள அந்த நாடு, வேலையின்மையை பாதியாகக் குறைத்துள்ளது. ஐரோப்பிய மண்டலத்தில் மிக வேகமாக வளர்ச்சி பெறும் நாடாகவும் ஸ்பெயின் திகழும் என கணிக்கப்பட்டுள்ளது.
Summary
Spanish players receive an enthusiastic welcome before a crowd of 2 million people!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஸ்பெயின் வீரர்கள் மீது தாக்குதல்! ஆர்ஜென்டீனா வீரர்களுக்கு தடை விதிக்கப்படுமா?
உலகக்கோப்பை வெற்றிக்குப் பின் ஸ்பெயின் - ஆர்ஜென்டீனா வீரர்கள் மோதல்: ஃபிஃபா விசாரணை!

8 போட்டிகளில் 140 முறை கோல் அடிக்க முயன்ற ஸ்பெயின்! மற்ற அணிகள் எவ்வளவு?








