ஸ்பெயின் அணி வீரர்களை தாக்கிய சம்பவத்தில், ஆர்ஜென்டீனா அணி வீரர்கள் தடைகளை எதிர்கொள்ளவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
அமெரிக்காவின் நியூஜெர்சியில் கடந்த திங்கள்கிழமை அதிகாலை நடைபெற்ற பிஃபா கால்பந்து உலகக் கோப்பைத் தொடரில் ஆர்ஜென்டீனாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ஸ்பெயின் அணி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை உச்சி முகர்ந்தது.
பின்னர் ஸ்பெயின் அணி வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டபோது, இரு அணி வீரர்களும் திடலில் மோதிக்கொண்டதால் அங்கு பரபரப்பான சூழல் உருவானது. இந்தச் சம்பவம் தொடர்பாக பிஃபா நேற்று (ஜூலை 20) விசாரணை நடத்தியது. விடியோ காட்சிகளில் ஆர்ஜென்டீனா வீரர் லியாண்ட்ரோ பரேடெஸ் உள்பட பல வீரர்கள் கைகலப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.
ஸ்பெயின் வீரர் எரிக் கார்சியாவின் கழுத்தைப் பிடித்துத் தள்ளிய லியாண்ட்ரோ, ஸ்பெயின் அணியின் இளம் மிட்ஃபீல்டர் கவி தலையிட்டபோது அவரையும் கீழேத்தள்ளினார்.
வெற்றியைக் கொண்டாட ஸ்பெயின் கேப்டன் ரோட்ரி திடலுக்குள் ஓடுபோது, ஆர்ஜென்டீனாவின் தடுப்பாட்ட வீரர் நஹூயல் மொலினா அவரது வயிற்றில் அடித்ததும் விடியோவில் பதிவாகியிருந்தது. இதனால், ஆர்ஜென்டீன பயிற்சியாளர் லயோனல் ஸ்கலோனி மற்றும் பிற வீரர்கள் நிலைமையைச் சமாதானப்படுத்த முயன்றனர்.
இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில். மோதலில் ஈடுபட்ட ஆர்ஜென்டீனா வீரர்கள் கடுமையான தடைகளை எதிர்கொள்ள நேரிடும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிஃபா விதிகளின் 14-வது பிரிவின் கீழ், வன்முறைச் செயல்களில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்ட வீரர்கள் குறைந்தபட்சம் மூன்று போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
எதிரணி வீரரைத் தாக்குதல், முழங்கையால் இடித்தல், குத்துதல், உதைத்தல், கடித்தல் போன்ற குற்றங்களுக்கும் இதே குறைந்தபட்சத் தடை பொருந்தும் என்பதால், லியாண்ட்ரோ பரேடிஸ் உள்பட ஆர்ஜென்டீனா வீரர்கள் தடைகளை எதிர்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Summary
Argentina's World Cup final defeat to Spain could have further consequences, with FIFA launching an investigation into the post-match clashes that broke out after Sunday's final at the New York New Jersey Stadium in New Jersey.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
உலகக்கோப்பை வெற்றிக்குப் பின் ஸ்பெயின் - ஆர்ஜென்டீனா வீரர்கள் மோதல்: ஃபிஃபா விசாரணை!

20 லட்சம் பேர் முன்னிலையில் ஸ்பெயின் வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு!

ஸ்பெயின் அணி சிறப்பாக விளையாடியது: ஆர்ஜென்டீனா பயிற்சியாளர் பேட்டி!







