திருவாரூர், திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் அமமுக நிச்சயம் வெற்றி பெறும். அதன்மூலம், தமிழகத்தில் அமமுக தனது செல்வாக்கை பெருமளவில் உயர்த்தும் என்று அக்கட்சியின் துணைப் பொதுச் செயலர் டி.டி.வி. தினகரன் தெரிவித்தார்.
அமமுக சார்பில் ஏழை மக்களுக்கு நல உதவிகள் வழங்கும் விழா, பொதுக்கூட்டம் ஆகியவை வேலூர் மாங்காய் மண்டி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில், டி.டி.வி.தினகரன் பங்கேற்று பேசியதாவது:
ஜெயலலிதா பிறந்த நாளில் நடக்க இருந்த இந்தப் பொதுக்கூட்டம் தமிழகத்தை ஆள்பவர்களால் தடுக்கப்பட்டது. எனினும், நீதிமன்றத்தில் வென்று சசிகலாவின் பிறந்த நாளில் இந்தக் கூட்டம் நடத்தப்படுகிறது.
எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் விரைவில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல்களில் அமமுகவுக்கும், திமுகவுக்கும்தான் போட்டி வரும். ஆர்.கே.நகர் தொகுதியைப்போல் இவ்விரு தொகுதிகளிலும் அமமுக நிச்சயம் வெற்றி பெறும்.
டெல்டா பகுதிகளில் ஏரிகள் தூர்வாராததைக் கண்டித்து அமமுக மீண்டும் போராட்டம் நடத்தும். தமிழகத்தில் எப்போது தேர்தல் வந்தாலும் அமமுக வெற்றி பெறும். அடுத்து மத்தியில் யார் ஆட்சி செய்வார்கள், யார் பிரதமராக வேண்டும் என்பதை தமிழக மக்கள் தீர்மானிக்கும் நிலை வரும். இதற்கு அமமுகவை மக்கள் வெற்றி பெறச் செய்திட வேண்டும்.
2019-இல் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அமமுக நிச்சயம் வெற்றி பெறும். தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் வெல்வது லட்சியம் என்றாலும், 37 தொகுதிகளில் நிச்சயம் வெற்றி பெறும். இதேபோல், 200 சட்டப்பேரவை தொகுதிகளில் அமமுக நிச்சயம் வெற்றி பெறும் என்றார் அவர்.
கூட்டத்தில், கட்சியின் அமைப்புச் செயலர்கள் செந்தில்
பாலாஜி, சி.கோபால், ஞானசேகரன், கொள்கை பரப்புச் செயலர் தங்கதமிழ்ச்செல்வன், வேலூர் கிழக்கு மாவட்டச் செயலர் என்.ஜி.பார்த்திபன், மேற்கு மாவட்டச் செயலர் பாலசுப்பிரமணி, மத்திய மாவட்டச் செயலர் கலையரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முடங்கிய இபிஎஃப் சேவை: கண்ணீா்விடும் ஓய்வூதியதாரா்கள்! அரசு அலட்சியத்தால் 3 வாரங்களாக தொடரும் நெருக்கடி

காரிமங்கலம் அருகே நீரின்றி காயும் நிலக்கடலை பயிா்கள்

வழக்குரைஞா் மீதான தாக்குதல்: வழக்கை தில்லி குற்றப்பிரிவுக்கு மாற்ற உச்சநீதிமன்றம் உத்தரவு

தா்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரிக்கை சோனம் வாங்சுக் போராட்டத்துக்கு திமுக, ஆம் ஆத்மி ஆதரவு!
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai


