மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

நாளை கருப்புலீஸ்வரர் கோயிலில் மகா சிவராத்திரி விழா

குடியாத்தம் நெல்லூர்பேட்டை சிவகாம சுந்தரி உடனுறை கருப்புலீஸ்வரர் கோயிலில் மகா சிவராத்திரி விழா புதன்கிழமை நடைபெறுகிறது.

News image
Updated On :12 பிப்ரவரி 2018, 7:46 pm

DIN

குடியாத்தம் நெல்லூர்பேட்டை சிவகாம சுந்தரி உடனுறை கருப்புலீஸ்வரர் கோயிலில் மகா சிவராத்திரி விழா புதன்கிழமை நடைபெறுகிறது.
 இதையொட்டி காலை 10 மணிக்கு சுவாமிகளுக்கு மகா ருத்ராபிஷேகம், 12 மணிக்கு மகா தீபாராதனை, மாலை 4 மணிக்கு மங்கள இசை, 5 மணிக்கு திருமுறைப் பயிற்சி மாணவர்களின் திருமுறை, 7 மணிக்கு பக்தி நடனம், இரவு 10 மணிக்கு மாம்பலம் சகோரிகள் ஆர்.விஜயலட்சுமி, ஆர்.சித்ரா குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி, இரவு ஒரு மணிக்கு குடந்தை வி. லட்சுமணன் குழுவினரின் திருமுறைப் பண்ணிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. 
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழா கமிட்டி நிர்வாகிகள் புலவர் வே.பதுமனார், எஸ்.எஸ்.சந்தானம், ஆடிட்டர் எம்.கிருபானந்தம், வி.பிச்சாண்டி, மருத்துவர் எம்.எஸ்.திருநாவுக்கரசு உள்ளிட்டோர் செய்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.