கர்நாடக மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தேர்தலுக்காக வேலூரில் இருந்து 107 மின்னணு வாக்கு இயந்திரங்கள் அம்மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
கர்நாடக மாநிலத்தில் விரைவில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து வாக்குப்பதிவுக்கு பயன்படுத்துவதற்காக தேர்தல் ஆணையம் அண்டை மாநிலங்களில் இருந்து மின்னணு இயந்திரங்களைப் பெற்று வருகிறது.
இதன்படி, வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 107 மின்னணு இயந்திரங்கள் தேர்தல் பிரிவு வட்டாட்சியர் சச்சிதானந்தம் மேற்பார்வையில் புதன்கிழமை காலை லாரிகளில் ஏற்றப்பட்டு கர்நாடக மாநிலத்துக்கு அனுப்பப்பட்டன. மின்னணு இயந்திரங்களின் பாதுகாப்புக்காக துப்பாக்கி ஏந்திய தமிழக, கர்நாடக போலீஸார் லாரிகளில் சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.