போக்குவரத்து நெரிசலில் "தவிக்கும்' வாணியம்பாடி
வாணியம்பாடி நகரின் முக்கியப் பகுதியில் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.


வாணியம்பாடி நகரின் முக்கியப் பகுதியில் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். புதிதாக பொறுப்பேற்றுள்ள டிஎஸ்பி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
வாணியம்பாடி நகரின் முக்கியப் பகுதிகளாக பேருந்து நிலையம், காதர்பேட்டை (சந்திப்பு), கச்சேரி சாலை, சி.எல். சாலை, மலங்கு ரோடு மற்றும் நியூடவுன் கோணாமேடு, ஆற்றுமேடு ஆகிய பகுதிகளில் மக்கள் அதிக நடமாட்டம் உள்ள பகுதியாகும். இப்பகுதி வழியாக தினந்தோறும் காலை, மாலையில் கல்லூரி மற்றும் பள்ளிப் பேருந்துகள், வேன்கள், ஆட்டோக்கள் செல்கின்றன. அதிகளவில் இரு சக்கர வாகனங்களும் சென்று வருகின்றன. இதேபோன்று மேட்டுப்பாளையம் கூட்டுச் சாலை, செட்டியப்பனூர் கூட்டுச் சாலை ஆகிய பகுதிகளில் அதிகளவு வாகனங்கள் செல்கின்றன. இப்பகுதிகளில் அன்றாடம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் மக்கள் நடமாட்டம் இருப்பதால் போக்குவரத்து நெரிசலால் அவதிப்படுகின்றனர். சாலை ஓரங்களில் ஆக்கிரமிப்புகளாலும், வாகனங்கள் நிறுத்திக் கொள்வதாலும் கடும் நெரிசல் ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில், வாணியம்பாடியில் போக்குவரத்து காவல் நிலையம் இருந்தும் இதில் ஒரு காவல் ஆய்வாளர், ஒரு உதவி ஆய்வாளர் மற்றும் ஒரு பெண் காவலர் மட்டுமே உள்ளதாகக் கூறப்படுகிறது. 10-க்கும் மேற்பட்டோர் இருக்க வேண்டிய இடத்தில் கடந்த சில மாதங்களாக 3 பேர் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். இத்தகைய நிலையில் ஒரு சில நேரங்களில் போக்குவரத்து காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் ஆகியோரைபாதுகாப்பு பணிக்காகவும் அனுப்பி விடுவதாகவும் கூறப்படுகிறது.
வாணியம்பாடியில் புதிதாக பொறுப்பேற்றுள்ள புதிய டி.எஸ்.பி. முரளி நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் சாலைகளில் ஆய்வு மேற்கொண்டு, காலை மற்றும் மாலை நேரங்களில் போலீஸாரை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தவும், போக்குவரத்து நெரிசலைத் தவிர்த்திட உரிய நடவடிக்கை எடுத்திடவும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், நகர போக்குவரத்துக் காவல் நிலையத்துக்கு காவலர்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் பொதுமக்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...