சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

வாரியத் தேர்வில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் சாதனை

குடியாத்தம் குரு ராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் ஏப்ரல் மாதம் நடைபெற்ற அரசு வாரியத் தேர்வில் அதிக தேர்ச்சி பெற்று மாநில அளவில் சாதனை படைத்துள்ளனர். 

Updated On :30 ஜனவரி 2024, 6:44 pm IST

குடியாத்தம் குரு ராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் ஏப்ரல் மாதம் நடைபெற்ற அரசு வாரியத் தேர்வில் அதிக தேர்ச்சி பெற்று மாநில அளவில் சாதனை படைத்துள்ளனர். 
இக்கல்லூரியைச் சேர்ந்த எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் துறை மாணவி ஆர்.மோனிஷா, மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை மாணவர்கள் வி.பிரசாந்த், வி.கார்த்தி ஆகிய  மூவரும் 700-க்கு 693 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை மாணவர்கள் வி.மோகன், ஏ.கௌதம் ஆகியோர் 690 மதிப்பெண்கள் பெற்று 2-ஆம் இடமும், மெக்கானிக்கல் துறை மாணவர் பி.ஹேம்நாத்குமார் 689 மதிப்பெண்கள் பெற்று 3-ஆம் இடமும் பிடித்துள்ளனர். தேர்வு எழுதிய 723 மாணவர்களில் 261 பேர் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 650-க்கு மேல் 156 மாணவர்கள் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.  இக்கல்லூரியில் பயின்று கடந்த 8 ஆண்டுகளாக வெளியேறிய 3,315 மாணவ, மாணவிகள் வளாக நேர்காணலில் வேலைவாய்ப்பு பெற்றுச் சென்றனர். வாரியத் தேர்வில் சாதனை படைத்த மாணவர்களை கல்லூரித் தலைவர் க. எதிராசன், செயலர்கள் எம். பிரகாசம், கே.எஸ். பாபு, பொருளாளர் ஆர். சுரேஷ்மணி, அறக்கட்டளைத் தலைவர் எஸ். குமார், கல்லூரி முதல்வர் எஸ். முருகதாஸ், இயக்குநர்கள் கே. சேகர், வி. ராமு, ஜெ. ரமணன் உள்ளிட்டோர் பாராட்டினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.