இன்று விண்ணில் பாய்கிறது ‘விக்ரம்-1’ தனியாா் ராக்கெட்: இஸ்ரோ வரலாற்றில் முதல்முறை உயா் கல்வி பயிலும் வெளிநாட்டினருக்கு 4 ஆண்டுகள் மட்டுமே அனுமதி: அமெரிக்காதமிழகம் முழுவதும் 35 வட்டாட்சியா் அலுவலகங்களில் சோதனை: கணக்கில் வராத ரூ. 82 லட்சம் பறிமுதல் ‘அம்மா மினி கிளினிக்’ திட்டம்: மீண்டும் செயல்படுத்துகிறது தவெக அரசுபிரிட்டன் பிரதமராகிறாா் ஆண்டி பா்ன்ஹாம்
/

குப்பைக் கிடங்கில் தொடரும் தீ விபத்து: சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதாக குற்றச்சாட்டு

திருப்பத்தூரில் உள்ள குப்பைக் கிடங்கில் அடிக்கடி தீப்பற்றி எரிவதால் மாசு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

Updated On :29 ஜூன் 2018, 12:31 am IST

திருப்பத்தூரில் உள்ள குப்பைக் கிடங்கில் அடிக்கடி தீப்பற்றி எரிவதால் மாசு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
திருப்பத்தூரில் ஆங்காங்கே கொட்டப்படும் குப்பைகளால் ஏற்படும் பாதிப்பு குறித்து கடந்த ஆகஸ்ட் மாதம் தினமணியில் புகைப்படத்துடன் செய்தி வெளியானது. 
இதையடுத்து திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் பஉச நகரில் உள்ள குப்பைக் கிடங்கையொட்டி, சுமார் 13 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் குப்பைகள் தரம் பிரிப்பு மையம் கட்டப்பட்டு வருகிறது. மேலும், மக்கும் மற்றும் மக்காத குப்பைகளில் இருந்து உரம் தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் நகரப் பகுதிகளில் இருந்து மட்டும் நாள் ஒன்றுக்கு சுமார் 36 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன.
 இதைக் குறைக்கும் வகையில் 5 ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்ட குடியிருப்புகளில் உள்ளவர்கள் அவர்களாகவே குப்பைகளைத் தரம் பிரித்து நகராட்சி துப்புரவுப் பணியாளர்களிடம் வழங்க வேண்டும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தக் குப்பைக் கிடங்கில் மர்ம நபர்களால் தீ வைக்கும் சம்பவங்கள் அடிக்கடி ஏற்படுகிறது. இதைக் கண்டித்து பொதுமக்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தியுள்ளனர்.
இந்தக் குப்பைக் கிடங்கு அருகே ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளும், நூற்றுக்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்களும், 3 திருமண மண்டபங்களும் உள்ளன.
 குப்பைக் கிடங்கில் தீப்பிடித்தால் அதை அணைக்க சுமார் 3 நாள்களாகிறது. மேலும், துர்நாற்றத்துடன் புகை வெளியாவதால் இப்பகுதியில் வசிப்பவர்களுக்கு நுரையீரல் மற்றும் சுவாசம் தொடர்பான பிரச்னைகள் ஏற்படுவதாக புகார் கூறப்படுகிறது. 
எனவே, குப்பைகளைத் தரம் பிரித்து உரம் தயாரிக்கும் கிடங்கு மட்டும் இப்பகுதியில் செயல்பட வேண்டும் எனவும், குப்பை கிடங்கை மக்கள் நடமாட்டம் குறைவாக உள்ள பகுதியில் மாற்றி அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.