திருப்பத்தூரில் திடீர் மின்வெட்டு

திருப்பத்தூரில் கடந்த இரு நாள்களாக அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்களும், பிளஸ் 2 மாணவர்களும் கடும் பாதிப்புக்குள்ளாகினர்.
Published on

திருப்பத்தூரில் கடந்த இரு நாள்களாக அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்களும், பிளஸ் 2 மாணவர்களும் கடும் பாதிப்புக்குள்ளாகினர்.
திருப்பத்தூரில் புதன் மற்றும் வியாழக்கிழமை ஆகிய இரு நாள்கள் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. 
பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்கியுள்ள நிலையில் அறிவிக்கப்படாத திடீர் மின்வெட்டு காரணமாக மாணவர்களும், பொதுமக்களும் பாதிப்புக்குள்ளாகினர்.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், வெங்களாபுரத்தில் துணை மின் நிலையம் அருகே உள்ள புதர் செடிக்கு சமூக விரோதிகள் சிலர் தீ வைத்ததால் தீ பரவியது. தகவலின் பேரில், ஆலங்காயம் தீயணைப்புத் துறையினர் அங்கு சென்று தீயை அணைத்தனர். இதனால் பாதுகாப்பு கருதி சிறிது நேரம் மின் தடை செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com