பெண் தூக்கிட்ட நிலையில் சாவு: கணவரிடம் விசாரணை

ஏலகிரியில் உள்ள மேட்டுக்கனியூரில் பெண் தூக்கிட்ட நிலையில் இறந்தது குறித்து அவரது கணவரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

Published On :30 ஜனவரி 2024, 6:30 pm IST

ஏலகிரியில் உள்ள மேட்டுக்கனியூரில் பெண் தூக்கிட்ட நிலையில் இறந்தது குறித்து அவரது கணவரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். 
 வேலூர்மாவட்டம், திருப்பத்தூரை அடுத்த புதூர்நாடு பகுதி மலை திருப்பத்தூர் கிராமத்தைச் சேர்ந்த வேடியின் மகன் வெங்கட்ராமன்(37). கட்டடத் தொழிலாளியான இவர், ஏலகிரியில் நிலாவூர் பகுதியைச் சேர்ந்த காளியின் மகள் சந்திரமதியை (25) 7 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டார். 
 இவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் உள்னர். இவர்களுக்கு சொந்த வீடு இல்லாததால், மேட்டுக்கனியூர் பகுதியில் ஊர் சார்பில் இடம் ஒதுக்கப்பட்டு, வீடு கட்டி குடும்பத்துடன் வாசித்து வந்தனர்.
 இந்நிலையில், வெங்கட்ராமன் சென்னையில் பணிபுரிந்து வந்தார். மாதச் சீட்டு ஒன்றை கட்டி வந்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு சீட்டு எடுத்த பணம் ஒரு லட்சத்தை எடுத்து வந்து, கடன்களை தீர்த்துவிடலாம் என வெங்கட்ராமன் தனது மனைவியிடம் கூறியுள்ளார். ஆனால், சந்திரமதி பணத்தை அவரது தாய் வீட்டில் கொடுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், வெங்கட்ராமனுக்கும், வேறொரு பெண்ணுக்கும் தகாத உறவு இருந்ததாகவும், இதனால் தம்பதிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
 இந்நிலையில், வெங்கட்ராமன் கடந்த வெள்ளிக்கிழமை சென்னையிலிருந்து அவரது வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, தம்பதிக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர், வெங்கட்ராமன் திங்கள்கிழமை காலை மீண்டும் சென்னைக்கு வேலைக்குச் சென்றுள்ளார். 
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை கூலி வேலைக்குச் சென்றுவிட்டு,  மாலை வீட்டுக்கு வந்த சந்திரமதி, புதன்கிழமை காலை அவரது வீட்டில் வயர் மூலம் தூக்கிட்டு, அமர்ந்த நிலையில் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள் ஏலகிரி மலை போலீஸாருக்கு அளித்த தகவலின் பேரில், நிகழ்விடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், சென்னையிலுள்ள வெங்கட்ராமனுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, ஜோலார்பேட்டை காவல் நிலையத்துக்கு வரவழைத்தனர். அங்கு அவரைக் கைது செய்த போலீஸார், சந்திரமதி தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கழுத்தை இறுக்கிக் கொலை செய்து தூக்கிலிடப்பட்டாரா என விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.