அரக்கோணம் அருகே கள்ள மது விற்பனையின் போது ஏற்பட்ட தகராறில், தொழிலாளியை கொலை செய்ததாக தாய், மகனை போலீஸார் கைது செய்தனர்.
அரக்கோணத்தை அடுத்த உள்ளியம்பாக்கம் காலனியைச் சேர்ந்த ரமேஷின் மகன் சன்ராஜ் (20). வர்ணம் பூசும் தொழிலாளி. இவர் ஞாயிற்றுக்கிழமை இரவு அரக்கோணத்தை அடுத்த கீழாந்தூர் கிராமத்தில் உள்ள பெட்டிக் கடையில் அரசு டாஸ்மாக் கடையின் மதுவை வாங்கியதாகத் தெரிகிறது. அப்போது அவருக்கும், அந்த கடை உரிமையாளரான லலிதா(எ) ஜெயலலிதாவுக்கும் (47) தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஜெயலலிதாவும், அவரது மகன் சுதாகர் (எ) சேட்டுவும்(22) சேர்ந்து சன்ராஜை தள்ளியதாகக் கூறப்படுகிறது. இதில் கீழே விழுந்து பலத்த காயம் அடைந்த சன்ராஜ், அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர், மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.
இதையடுத்து, ஜெயலலிதா, சேட்டு ஆகியோரை கைது செய்த அரக்கோணம் கிராமிய போலீஸார், மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாப்பிரெட்டிப்பட்டி அருகே ரூ. 2.10 லட்சம் பறிமுதல்

சேலத்தில் இருசக்கர வாகனங்களில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.3.67 லட்சம் பறிமுதல்

திமுக கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து சேலத்தில் இன்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பிரசாரம்

இந்திய தோ்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படவில்லை: ஆா். முத்தரசன்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

