ராணிப்பேட்டை பெல் நிறுவனத்தின் பாதுகாக்கப்பட்ட குடியிருப்புப் பகுதியில் 4 வீடுகளின் பூட்டுகளை உடைத்து வெள்ளிப் பொருள்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
பெல் நிறுவனத்தில் பணிபுரிந்து வருபவர்கள் காவியா, மோகன், கிறிஸ்டோபர் மற்றும் பாபு. இவர்கள் 4 பேரும் வீடுகளைப் பூட்டிவிட்டு வெளியூர் சென்றுள்ளனர். இந்நிலையில், காவியா சனிக்கிழமை வீட்டிற்கு வந்து பார்த்தபோது, பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே பீரோவில் இருந்த கால் கிலோ வெள்ளிப் பொருள்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
மேலும், மோகன், கிறிஸ்டோபர், பாபு ஆகியோரின் வீடுகளிலும் பூட்டுகளை உடைத்து திருடப்பட்டதும் தெரியவந்தது. திருடு போன பொருள்களின் விவரம் குறித்து உடனடியாக தெரியவில்லை.
இதுகுறித்து சிப்காட் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இப்பகுதியில் 5-ஆவது முறையாக திருட்டுச் சம்பவம் நடந்துள்ளதால், பொதுமக்கள்
அச்சமடைந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சாம்பியன்ஸ் லீக்கை மீண்டும் வென்றது பிஎஸ்ஜி..! பெனால்டி வாய்ப்பில் த்ரில் வெற்றி!

கதாநாயகனைப் போல நடிக்க முயன்றதால் தாக்கப்பட்ட அபிஷேக் பானர்ஜி: பாஜக

மதுரை கூடலழகர் கோயிலில் வைகாசி திருவிழா தேரோட்டம்!
டொனால்ட் டிரம்ப் உடல் எடையைக் குறைக்க மருத்துவ அறிவுரை!
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


