வேலூர் மாவட்டம், ஏலகிரி மலையில் கற்திட்டை வடிவிலான நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின், தமிழ்த்துறைப் பேராசிரியர் க.மோகன்காந்தி, ஆய்வு மாணவர் ரா.நீலமேகம் ஆகியோர் ஏலகிரி, கொட்டையூர் பகுதியில் மேற்கொண்ட கள ஆய்வில் சோழர் காலத்தைச் சேர்ந்த கி.பி. 10-ஆம் நூற்றாண்டு நடுகற்கள் இரண்டினைக் கண்டறிந்துள்ளனர்.
இதுகுறித்து க.மோகன்காந்தி கூறுகையில், ஏலகிரியிலுள்ள
12 கிராமங்களில் கொட்டையூர் கிராமமும் ஒன்று. இந்த ஊரில் பழைமையான வரலாற்றைத் தாங்கி நிற்கும் இரண்டு நடுகற்கள் தனியார் விளைநிலத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
2.5 அடி உயரத்தில் முதல் நடுகல் கற்திட்டை வடிவில் காணப்படுகிறது. அதாவது மூன்று பக்கங்களிலும் பலகைக் கல்லை வைத்து, மேலே ஒரு பெரிய பலகைக் கல்லைப் போர்த்திய நிலையில் காணப்படுகிறது. இந்த நடுகல் சிதைந்த நிலையில் உள்ளது. இதில் இடம்பெற்றுள்ள நடுகல் ஏலகிரியில் நடைபெற்ற பெரிய போரில் வீரன் உயிர் விட்டிருக்க வேண்டும். இவ்வீரனின் வலது கையில் குறுவாள் ஒன்று உள்ளது.
இடது கையில் கத்தி போன்ற நீண்ட ஆயுதம் ஒன்றுள்ளது. இடது பக்கக் கொண்டையிட்டு, காதுகளில் குண்டலங்களுடன் இந்நடுகல் காணப்படுகிறது. இந்த நடுகல் வீரனுக்கு அருகில் ஒரு பெண் உருவம் காணலாகிறது. இப்பெண் உருவம் நாட்டுக்காக உயிர்விட்ட வீரனின் மனைவியாகும். இப்பெண் தன் கணவன் இறந்தவுடன் தானும் உடன்கட்டை ஏறி உயிர் விட்டிருக்கிறார். இப்பெண்ணின் வலது கையில் கற்குடம் ஒன்று காணப்படுகிறது. இடது கை வயிற்றின் மேல் வைத்த நிலையில் உள்ளது.
இரண்டாவது நடுகல் 4 அடி உயரமும், 2.5 அடி அகலமும் கொண்டு, புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளது. இந்நடுகல் இடது பக்கக் கொண்டையுடன் காதுகளில் குண்டலங்களுடன் காட்சி தருகிறது. வலது கையில் கத்தி ஒன்றை ஏந்திய நிலையில் உள்ளது. இந்த நடுகற்கள் ஏலகிரியில் வரலாற்றுக் காலம் தொட்டு மக்கள் வாழ்ந்து வருவதையும், வரலாற்றை இம்மக்கள் நடுகற்கள் மூலம் பதிவு செய்துள்ளதையும், பதிவு செய்துள்ள வரலாற்றை தற்காலம் வரை பாதுகாத்து வருவதையும் அறிய முடிகிறது. மேலும், இவ்விரு நடுகற்களும் அழிவின் விளிம்பில் உள்ளதால் இவற்றைத் தொல்பொருள் துறை பாதுகாக்க வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
குழந்தைகள் உணவில் எலி விஷம்! விற்றப் பொருள்களைத் திரும்பப் பெறும் தனியார் நிறுவனம்!
லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்

‘சிஎம் சார், 5 வருசத்துல என்ன பண்ணிருக்கீங்க?’ என கேட்டால்... ஸ்டாலின் விளக்கம்!
தவெக தலைவர் விஜய் இன்று எங்கு பிரசாரம் செய்கிறார்?
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

