குருவராஜபேட்டை தொடக்கக் கூட்டுறவு  கடன் சங்கத் தேர்தலில் திமுக வெற்றி

குருவராஜபேட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க இயக்குநர்கள் பொறுப்புகளுக்காக நடைபெற்ற தேர்தலில் திமுகவினர் வெற்றி பெற்றனர்.

Published On :30 ஜனவரி 2024, 10:11 pm IST

குருவராஜபேட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க இயக்குநர்கள் பொறுப்புகளுக்காக நடைபெற்ற தேர்தலில் திமுகவினர் வெற்றி பெற்றனர்.
அரக்கோணத்தை அடுத்து குருவராஜபேட்டையில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்துக்கு அண்மையில் நடைபெற்ற இயக்குநர்கள் தேர்தல் குறித்து கடன் சங்க உறுப்பினர்கள், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததை அடுத்து தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், இச்சங்க இயக்குநர்கள் பதவிகளுக்கான தேர்தல் நீதிமன்ற அறிவிப்பைத் தொடர்ந்து கடந்த 1-ஆம் தேதி நடைபெற்றது. இதையடுத்து வாக்குகள் 
3-ஆம் தேதி எண்ணப்படடன.
இதில், 11 பதவிகளிலும் திமுகவைச் சேர்ந்தவர்களே வெற்றி பெற்றனர். திமுக வேலூர் கிழக்கு மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் எம்.பாலன், காசி ஏழுமலை, கஸ்தூரிகுப்புசாமி, செந்தாமரை ஊசால், காமராஜ், சி.மணி, எம்.கருணாநிதி, எம்.எஸ்.கோதண்டன், பி.கோவர்ததனம், என்.மனோகரன், 
ஜி.ஜி.சுப்பிரமணி ஆகிய 11 பேரும் தேர்வு செய்யப்பட்டனர். 
இந்த 11 பேருக்கும் காவேரிபாக்கம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் சி.மாணிக்கம், வடக்கு ஒன்றியச் செயலாளர் இ.செல்வம் ஆகிய இருவரும் வாழ்த்து தெரிவித்தனர். 
இச்சங்கத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 7) சங்க வளாகத்தில் நடைபெற உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.