ராணுவ முற்றுகையை நீக்கினால் ஹோர்முஸை திறக்க தயார்! அமெரிக்காவுக்கு ஈரான் நிபந்தனை!கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை அறிக்கை மீனவர்களின் போராட்ட அறிவிப்பால் பதற்றம்: அன்புமணி கேள்வி!புதிய தலைமைச் செயலகத்துக்கு எதிர்ப்பு! செப்.29-இல் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!தேசிய விருதைப் பெற்றார் ஜி.வி. பிரகாஷ் குமார்! தமிழ்நாட்டில் 40 நகராட்சி நிர்வாகத் துறை அலுவலகங்களில் சோதனை!ஆசிய விளையாட்டு: மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு தங்கம்!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்

டீசல் விலையேற்றத்துக்கு எதிர்ப்பு: வேலூரில் "ரிக்' லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்

டீசல் விலையேற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலூரில் ரிக் லாரி உரிமையாளர்கள் புதன்கிழமை முதல்

Published On :

டீசல் விலையேற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலூரில் ரிக் லாரி உரிமையாளர்கள் புதன்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், பெட்ரோல், டீசல் விலையேற்றத்தை அடுத்து ஆழ்துளைக் கிணறு அமைப்பதற்கான கட்டணத்தையும் உயர்த்தி அறிவித்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட ரிக் லாரிகள் உள்ளன. இவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மட்டுமன்றி பிற மாவட்டங்கள், அண்டை மாநிலங்களிலும் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணியில் ஈடுபடும் ரிக் லாரிகளுக்கு அதிக அளவில் டீசல் தேவைப்படுகிறது. சமீப காலமாக டீசல் விலை வேகமாக உயர்ந்து வருவதால், ரிக் லாரி உரிமையாளர்கள் கடும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதையடுத்து டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதன் விலையைக் குறைக்கக் கோரியும் புதன்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கும் பணிகளில் ஈடுபடாமல் அனைத்து ரிக் லாரிகளும் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால், புதிதாக வீடு கட்டுபவர்களும், விளை நிலங்களில் விதை விதைத்து நீராதாரத்துக்காக ஆழ்துளைக் கிணறுகள் அமைக்க காத்திருப்பவர்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து வேலூர் வட்ட ரிக் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ஆர்.பிரபு கூறியதாவது: கடுமையான டீசல் விலையேற்றத்தால் ஏற்கெனவே ஆழ்துளை கிணறு அமைக்கத் தேவையான பிட், குழாய்களின் விலை பெருமளவில் உயர்ந்துள்ளது. குறிப்பாக, ஒரு ஆழ்துளைக் கிணறு அமைக்கத் தேவையான பிட்களின் விலை ரூ. 18 ஆயிரத்திலிருந்து ரூ. 25 ஆயிரமாகவும், குழாய்களின் விலை ரூ. 2,700-லிருந்து ரூ. 3,900 ஆகவும்வும், ஆயில் விலை லிட்டர் ரூ. 80-லிருந்து ரூ. 150ஆகவும் உயர்ந்துள்ளது. ஆனால், ஆழ்துளைக் கிணறுகள் அமைப்பதற்கான கட்டணம் மட்டும் உயர்த்தப்படாமல் அதே நிலையில் உள்ளது. இதனால், ரிக் உரிமையாளர்கள் கடுமையான நெருக்கடிகளுக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
டீசல் விலையேற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து புதன்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் மேற்கொண்டுள்ளோம். 5 நாள்களுக்குப் பிறகு சங்கக் கூட்டம் நடத்தி வேலைநிறுத்தத்தைத் தொடர்வது குறித்து மீண்டும் முடிவு செய்யப்படும். இதனிடையே, டீசல் விலையேற்றத்தைக் கருத்தில் கொண்டு ஆழ்துளைக் கிணறு அமைக்கும் கட்டணம் ஒரு அடி ரூ. 70-லிருந்து ரூ. 88-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டணத்தை பின்பற்றாதவர்களுக்கு ரூ. 20 ஆயிரம் அபராதம் விதிக்கவும், அபராதத்தைக் கட்டத்தவறினால் ஒரு வார காலம் சம்பந்தப்பட்ட உரிமையாளரின் ரிக் லாரியை சிறைபிடிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.