கால்நடைப் பராமரிப்பு உதவியாளர் பணிக்கான நேர்காணல் ரத்து செய்யப்பட்டது குறித்து முறையாகத் தகவல் தெரிவிக்கப்படவில்லை எனக் கூறி வேலூரில் இளைஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வேலூர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள கால்நடைப் பராமரிப்பு உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு நேர்காணல் வேலூர் நேதாஜி விளையாட்டு அரங்கத்தில் பிப்ரவரி 23ஆம் தேதி தொடங்கி 27ஆம் தேதி வரை தினமும் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர், நிர்வாகக் காரணங்களால் இந்த நேர்காணல் ரத்து செய்யப்பட்டு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதுதொடர்பான தகவல் விண்ணப்பதாரர்களுக்கு சரிவர தெரிவிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், நேர்காணலில் பங்கேற்க மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து சனிக்கிழமை வந்திருந்த இளைஞர்கள், நேர்காணல் தள்ளிவைக்கப்பட்டிருப்பதை அறிந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். பின்னர், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் கால்நடைப் பராமரிப்பு உதவியாளர் பணிக்கு அதிகளவில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் 400-க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் நேர்காணல் நடைபெற இருந்த நேதாஜி விளையாட்டு மைதானத்துக்கு முன்பு திரண்டனர்.
அப்போது, அங்குள்ள அறிவிப்பு பலகையில் நேர்காணல் ரத்து செய்யப்பட்டிருப்பது குறித்து நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்தது. இது தொடர்பாக தங்களுக்கு முறையாக தகவல் தெரிவிக்கப்படவில்லை எனக் கூறி இளைஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த வேலூர் தெற்கு போலீஸார் விரைந்து சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு நடத்தினர். அப்போது, நேர்காணல் ரத்து செய்யப்பட்டது குறித்து நாளிதழ்களில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்ததாகத் தெரிவித்தனர். இதையடுத்து, இளைஞர்கள் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
உலக அதிசயம் எல்லோரா!

சாம்பியன்ஸ் லீக்கை மீண்டும் வென்றது பிஎஸ்ஜி..! பெனால்டி வாய்ப்பில் த்ரில் வெற்றி!

கதாநாயகனைப் போல நடிக்க முயன்றதால் தாக்கப்பட்ட அபிஷேக் பானர்ஜி: பாஜக

மதுரை கூடலழகர் கோயிலில் வைகாசி திருவிழா தேரோட்டம்!
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


