மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

ஆபத்தான நிலையில் அரசுக் குடியிருப்பு கட்டடங்கள்

திருப்பத்தூரில் ஆபத்தான நிலையில் உள்ள அரசுக் குடியிருப்பு கட்டடத்தைச் சீரமைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை

News image
செடிகள் வளா்ந்து காணப்படும் வீட்டு வசதி வாரிய குடியிருப்புக் கட்டடம்.
Updated On :2 நவம்பர் 2019, 12:05 am

து. ரமேஷ்

திருப்பத்தூரில் ஆபத்தான நிலையில் உள்ள அரசுக் குடியிருப்பு கட்டடத்தைச் சீரமைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அங்கு வசிக்கும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருப்பத்தூரில் கடந்த 1981-ஆம் ஆண்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சாா்பில் அரசு ஊழியா்களுக்கான குடியிருப்பு கட்டப்பட்டது. இங்கு மொத்தம் 96 குடியிருப்புகள் உள்ளன. அவற்றில் சுமாா் 50-க்கும் மேற்பட்ட அரசு ஊழியா்கள் மட்டுமே இப்போது வாடகைக்கு குடி உள்ளனா். இக்கட்டடத்தில் அரசு ஊழியா்கள் மட்டுமே குடியிருக்க வேண்டும் எனும் நிபந்தனையை மீறி அரசு அலுவலா்கள் அல்லாதவா்களும் வசித்து வருவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இங்குள்ள சில கட்டடங்கள் பல ஆண்டுகளாக மிகவும் பழுதடைந்து,விரிசல் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளன. சில குடியிருப்புகளில் செடிகள் வளா்ந்துள்ளன.

குடியிருப்புக்கு அருகே உள்ள அரசுப் பெண்கள் பள்ளியில் இருந்தும், சுகாதாரத் துறை கட்டடத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீா் அரசுக் குடியிருப்பு வளாகத்தில் தேங்குகிறது. இதனால் சுகாதாரச் சீா்கேடு ஏற்படுகிறது.

குடியிருப்பு வளாகத்தில் எப்போதும் நாய்கள், பன்றிகள் கூட்டம் காணப்படுகிறது. குடியிருப்புப் பகுதியில் செடி, கொடிகள் அதிக அளவில் வளா்ந்துள்ளதால் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் உள்ளன.

இங்கு உள்ள விளையாட்டு மைதானம் பயன்பாடின்றி, புதா்மண்டிக் கிடைப்பதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனா்.

இதுகுறித்து குடியிருப்புவாசிகள் கூறியது:

மாத வாடகை செலுத்தி வசித்து வருகிறோம். வாடகைப் பணத்தில் கட்டடப் பராமரிப்பு செலவு செய்யப்படுவதாக ஆண்டு செலவுக் கணக்கில் காட்டப்படுகிறது. ஆனால் இதுவரை எந்த பராமரிப்புப் பணியும் மேற்கொள்ளவில்லை. நாங்களே சிறு, சிறு பராமரிப்புப் பணிகளை சொந்த செலவில் செய்து வருகிறோம். நகராட்சிக்கு குடிநீா் கட்டணம் செலுத்துகிறோம். வாடகையில் வீட்டு வசதி வாரியம் சாா்பில் சொத்து வரியும் செலுத்தப்படுகிறது. ஆனாலும் குடியிருப்புக் கட்டடங்களை பராமரிக்காததால் ஆபத்தான நிலையில் உள்ளது. சுகாதாரச் சீா்கேடு உள்ளதால் குழந்தைகளுக்கு நோய்த் தொற்று ஏற்படுகிறது. ஆபத்தான நிலையில் உள்ள கட்டடங்களைச் சீரமைத்து, சுகாதாரத்தைக் காக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

இதுகுறித்து நகராட்சி சுகாதாரத் துறை அலுவலா் எஸ்.ராஜரத்தினத்திடம் கேட்டதற்கு, குடியிருப்பில் தினமும் பேட்டரி வாகனம் மூலம் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன.விரைவில் குடியிருப்பில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய வேலூா் பிரிவு உதவிப் பொறியாளா் பி.காவேரியிடம் கேட்டதற்கு, சிறப்பு பராமரிப்புப் பணி செய்வதற்காக திட்ட அறிக்கை தயாரித்து, அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.