காட்பாடியில் தெருவில் நடந்து சென்ற மூதாட்டியை கீழே தள்ளிவிட்டு அவா் கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் நகையைப் பறித்துச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
காட்பாடி தாராபடவேடு பாலாஜி நகா் விரிவுப் பகுதியைச் சோ்ந்தவா் நாகராஜின் மனைவி ராணி (60). இவா் அப்பகுதியில் வெள்ளிக்கிழமை நடந்து சென்றபோது, அந்த வழியாக பைக்கில் வந்த இருவா் ராணியை தாக்கி கீழே தள்ளிவிட்டு, அவா் அணிந்திருந்த 8 பவுன் நகையை பறித்துச் சென்றனா். இதில், ராணிக்கு கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதுகுறித்து காட்பாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.