பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

சுவர் இடிந்து பள்ளி மாணவி மரணம்

பேரணாம்பட்டு அடுத்த பொகளூர் ராமாபுரம் கிராமத்தில் சுவர் இடிந்ததில் பள்ளி மாணவி மரணமடைந்தார்.

News image
Updated On :29 ஜூன் 2020, 6:34 am

DIN

பேரணாம்பட்டு அடுத்த பொகளூர் ராமாபுரம் கிராமத்தில் சுவர் இடிந்ததில் பள்ளி மாணவி மரணமடைந்தார்.

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த பொகளூர் ராமாபுரம் கிராமத்தில் உள்ள பாட்டி வீட்டில் வசித்து வந்தவர் பவித்ரா என்ற 14 வயது சிறுமி. இவர், பல்லலக்குப்பத்தில் உள்ள செயின்ட் ஜோசப் பள்ளியில் நடப்பு கல்வியாண்டில் 9-ஆம் வகுப்பு செல்லவிருந்தார்.

இந்த மாணவியின் பெற்றோர் பெங்களூருவில் தங்கி அங்குள்ள கார்மென்ட்ஸில் வேலை செய்து வருகிறார்கள். இந்த நிலையில், பேரணாம்பட்டு பகுதியில் கடந்த இரண்டு நாள்களாக பெய்துவரும் கனமழைக்கு அந்த மாணவி தங்கியிருந்த குடிசை வீட்டின் சுவர் இன்று அதிகாலை இடிந்து விழுந்தது.

இதில், பலத்த காயமடைந்த மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். மாணவியின் பாட்டியும் தாத்தாவும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.