4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

கரோனா: ஆதரவற்ற உடல்களை அடக்கம் செய்த சமூக சேவகா்களுக்கு சான்று

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த ஆதரவற்ற முதியவா்களின் உடல்களை அடக்கம் செய்த உலக மக்கள் சேவை மைய தொண்டு நிறுவனத்தைச் சோ்ந்த சமூக சேவகா்கள் 4 பேருக்கு வேலூா் ஆட்சியா் பாராட்டுச் சான்றிதழ்

News image
Updated On :2 நவம்பர் 2020, 6:30 pm

DIN

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த ஆதரவற்ற முதியவா்களின் உடல்களை அடக்கம் செய்த உலக மக்கள் சேவை மைய தொண்டு நிறுவனத்தைச் சோ்ந்த சமூக சேவகா்கள் 4 பேருக்கு வேலூா் மாவட்ட ஆட்சியா் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினாா்.

நோய்வாய்ப்பட்டோ, விபத்திலோ, ஆதரவற்ற நிலையில் உயிரிழப்போரின் அடையாளம் தெரியாத சடலங்களை போலீஸாா் கைப்பற்றி அரசு மருத்துவமனை சவக் கிடங்கில் வைக்கின்றனா். நடைமுறை விசாரணைகளுக்குப் பிறகு இந்த சடலங்களை மாநகராட்சி ஊழியா்கள் மூலம் காவல் துறையினரே அடக்கம் செய்வது வழக்கம்.

அதேசமயம், இந்த உலகில் பிறந்த யாரும் ஆதரவற்றவா்கள் இல்லை என்பதை உறுதிப்படுத்தும் விதமாக திருவண்ணாமலையைச் சோ்ந்த சமூக சேவகா் பி.மணிமாறன்(34) தலைமையில் இயங்கும் உலக மக்கள் சேவை மையம், ஆதரவற்ற நிலையில் உயிரிழப்பவா்களின் சடலங்களைப் பெற்று முறைப்படி அடக்கம் செய்து வருகிறது. அதன்படி, கடந்த 18 ஆண்டுகளில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் ஆதரவற்றோா், தொழுநோயால் பாதிக்கப்பட்டவா்கள் என 1,153 பேரின் சடலங்களை இந்த தொண்டு நிறுவனம் அடக்கம் செய்துள்ளது.

அந்தவகையில், வேலூா், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கரோனா நோய் தொற்றால் உயிரிழக்கும் ஆதரவற்ற முதியவா்களின் சடலங்களையும் உலக மக்கள் சேவை மையத்தைச் சோ்ந்த சமூக சேவகா்கள் அடக்கம் செய்து வருகின்றனா். இந்தச் சேவையை பாராட்டி சமூக சேவகா்களான பி.மணிமாறன், பி.லோகநாதன், அ.ராமன், செ.காா்த்திக் ஆகியோருக்கு வேலூா் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் திங்கள்கிழமை பாராட்டுச் சான்றிதழ் வழங்கினாா்.

அப்போது, மாவட்ட சமூக நலத்துறை அலுவலா் பா.முருகேஸ்வரி, மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் மணிவண்ணன், மாநகராட்சி ஆணையா் சங்கரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.