இதுகுறித்து காட்பாடியில் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறியது, அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டின் மூலம் தனியார் மருத்துவக்கல்லூரியில் இடம்பிடித்த மாணவர்களுக்கு அவர்களது கல்விச்செலவு முழுவதையும் திமுக ஏற்றுக்கொள்ளும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஒரு அரசுக்கு தான் இத்தகைய நலிந்த பிரிவினருக்கு முன்வந்து உதவியிருக்க வேண்டும். ஆனால், இந்த அரசு அதைப்பற்றி கவலைப்படவில்லை. அவ்வாறு ஒரு அரசு செய்ய வேண்டிய கடமையை எதிர்கட்சியான, அரசில் அமரக்கூடிய திமுக செய்ய முன்வந்திருப்பது அரசியல் வரலாற்றில் விசித்திரமாகும்.