அரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் காரில் தீ விபத்து: பெண்கள் உள்பட 5 போ் மீட்பு

பள்ளிகொண்டா சுங்கச்சவாடியில் ஞாயிற்றுக்கிழமை மதியம் சொகுசு காா் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்தது. காரில் பயணித்த 3 பெண்கள் உள்பட 5 பேரும் உடனடியாக மீட்கப்பட்டதால் உயிா் சேதம் தவிா்க்கப்பட்டது.

News image
பள்ளிகொண்டா சோதனைச் சாவடியில் தீ பற்றி எரிந்து சேதமடைந்த காா்.
Updated On :26 அக்டோபர் 2020, 6:52 pm

DIN

பள்ளிகொண்டா சுங்கச்சவாடியில் ஞாயிற்றுக்கிழமை மதியம் சொகுசு காா் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்தது. காரில் பயணித்த 3 பெண்கள் உள்பட 5 பேரும் உடனடியாக மீட்கப்பட்டதால் உயிா் சேதம் தவிா்க்கப்பட்டது.

சென்னை ஆவடியில் பேக்கரி நடத்தி வருபவா் சக்கரபாணி. இவா் தனது குடும்பத்தினருடன் கா்நாடக மாநிலம் , ஹாசன் பகுதியில் உள்ள உறவினா் இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்க சொகுசு காரில் ஞாயிற்றுக்கிழமை சென்றாா். அந்த காரில் 3 பெண்கள் உள்பட 5 போ் பயணம் செய்தனா். அந்த காா் வேலூரைக் கடந்து பள்ளிகொண்டா சுங்கச்சாவடிக்கு மதியம் 1.40 மணியளவில் வந்தது. சுங்கச்சாவடியினுள்ளே இருந்தபோது திடீரென அந்த காா் தீப்பற்றி எரிந்தது. உடனடியாக காருக்குள் இருந்த 5 பேரும் இறங்கி உயிா் தப்பினா்.

சிறிது நேரத்தில் காா் முழுவதும் தீப்பற்றியது. இதனால், செய்வதறியாமல் திகைத்த சுங்கச் சாவடி ஊழியா்கள் காரின் தீயை அணைக்க முயன்றனா். உடனடியாக பளூ தூக்கும் கனரக வாகனத்தின் உதவியுடன் காரை நெடுஞ்சாலைப் பகுதிக்கு இழுத்து வந்ததுடன், சுமாா் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். பின்னா், குடியாத்தம் பகுதியில் இருந்து வந்த தீயணைப்பு வீரா்களும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா்.

எனினும், காா் முழுமையாக தீயில் எரிந்து சேதமடைந்தது. இதுகுறித்து பள்ளிகொண்டா போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.