டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

பரோலுக்கு விண்ணப்பித்துள்ள நளினிக்கு மருத்துவப் பரிசோதனை

ஒரு மாத காலம் பரோல் வழங்கக் கோரி  தமிழக முதல்வருக்கு மனு அனுப்பியுள்ள நளினிக்கு வேலூர் அரசு மருத்துவமனையில் உடல்நிலை பரிசோதனை செய்யப்பட்டது.

News image
நளினி (கோப்புப் படம்)
Updated On :27 ஆகஸ்ட் 2021, 10:22 am

DIN

வேலூர்: ஒரு மாத காலம் பரோல் வழங்கக் கோரி  தமிழக முதல்வருக்கு மனு அனுப்பியுள்ள நளினிக்கு வேலூர் அரசு மருத்துவமனையில் உடல்நிலை பரிசோதனை செய்யப்பட்டது. இந்த மருத்துவ பரிசோதனை அறிக்கை உயரதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முருகன் வேலூர் மத்திய ஆண்கள் சிறையிலும், அவரது மனைவி நளினி பெண்கள் தனிச்சிறையிலும் கடந்த 30 ஆண்டுகளாக அடைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 23-ஆம் தேதி நளினி தனக்கு மருத்துவ சிகிச்சை மேற்கொள்வதற்காக ஒரு மாதம் பரோல் வழங்கக்கோரி சிறைத்துறை அதிகாரிகள் மூலம் தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனுவை அனுப்பி வைத்திருந்தார். இந்நிலையில், நளினியின் உடல்நிலையை பரிசோதனை செய்திட சிறை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

அதனடிப்பையில்,  வேலூர் பெண்கள் தனிச்சிறையில் இருந்து நளினி வெள்ளிக்கிழமை காலை 9.45 மணியளவில் வேலூர் பெண்ட்லென்ட் அரசு மருத்துவமனைக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார். அங்கு அவருக்கு ரத்த அழுத்தம், இ,சி.ஜி., கர்ப்பப்பை பரிசோதனை, எலும்பு சிகிச்சை பிரிவில் பரிசோதனை செய்யப்பட்டன. பல் சிகிச்சை பிரிவிலும் அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. மதியம் ஒரு மணிவரை இந்த பரிசோதனைகள் நடத்தப்பட்டன. அதன்பிறகு அவர் மீண்டும் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

நளினிக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றதையொட்டி காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ் தலைமையில் மருத்துவமனை வளாகம் முழுவதும் போலீஸôர் குவிக்கப்பட்டிருந்தனர். நளினி ஒரு மாதம் பரோல் கேட்டு முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பியிருந்ததன் காரணமாக அவருக்கு உடல்நிலை குறித்து பரிசோதனை செய்யப்பட்டதாகவும், அவரது உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கை  உயரதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.