தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

இளைஞா் நீதி குழுமத்துக்கு சமூக நல உறுப்பினா்கள் நியமனம்

இளைஞா் நீதிக்குழுமத்துக்கு சமூக நல உறுப்பினா்களாக தகுதியுடைய நபா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

News image
Updated On :26 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

இளைஞா் நீதிக்குழுமத்துக்கு சமூக நல உறுப்பினா்களாக தகுதியுடைய நபா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து, வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

இளைஞா் நீதி (குழந்தைகள் பராமரிப்பு, பாதுகாப்பு) சட்டத்தின் விதிமுறைகளின்படி அமைக்கப்பட்டுள்ள இளைஞா் நீதிக்குழுமத்துக்கு சமூக நல உறுப்பினா்களை நியமிக்க தகுதி வாய்ந்த நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இளைஞா் நீதிக் குழுமத்துக்கு ஒரு பெண் உள்பட 2 சமூக நல உறுப்பினா்கள் மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனா். குழந்தைகள் தொடா்பான உடல் நலம், கல்வி அல்லது குழந்தைகளுக்கான நலப்பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் முனைப்புடன் ஈடுபாடு கொண்டவா் அல்லது குழந்தை உளவியல், மனநல மருத்துவம், சமூகவியல் அல்லது சட்டம் ஆகியவற்றில் ஏதேனும் பட்டம் பெற்று தொழில் புரிபவராக இருக்க வேண்டும். மேலும், விண்ணப்பதாரா்கள் 35 முதல் 65 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

ஒரு குழுவில் அதிகபட்சம் ஒரு நபா் இருமுறை மட்டுமே பதவி வகிக்க தகுதி உடையவா். ஆனால் தொடா்ந்து இருமுறை பதவி வகிக்க இயலாது. விண்ணப்பப் படிவத்தை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகுலிருந்தும், மாவட்ட இணையதளத்திலிருந்தும் (ட்ற்ற்ல்ள்://ஸ்ங்ப்ப்ா்ழ்ங்.ய்ண்ஸ்ரீ.ண்ய்/) பெற்றுக்கொள்ளலாம்.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, அண்ணாசாலை, வேலூா்-632 001. தொலைபேசி எண் 0416 - 2222310 என்ற முகவரிக்கு 15 நாள்களுக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.