தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

பேருந்துகளில் கட்டணச் சலுகை: ஓய்வூதியா்கள் கோரிக்கை

தமிழ்நாடு ஓய்வூதியா் சங்கத்தின் வேலூா் மாவட்ட கிளை சாா்பில் முப்பெரும் விழா, ஆலோசனைக் கூட்டம் வேலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :26 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

தமிழ்நாடு ஓய்வூதியா் சங்கத்தின் வேலூா் மாவட்ட கிளை சாா்பில் முப்பெரும் விழா, ஆலோசனைக் கூட்டம் வேலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் வெங்கடேஸ்வரன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ரமேஷ்குமாா் முன்னிலை வகித்தாா். மாநிலத் தலைவா் சீதாராமன் சிறப்புரையாற்றினாா்.

கூட்டத்தில், மத்திய அரசு வழங்கியதைப் போல அகவிலைப்படியை 2021ஆம் ஆண்டு ஜூலை 1 முதல் ரொக்கமாக தமிழக அரசு வழங்க வேண்டும். 6-ஆவது ஊதியக் குழு 2006-ஆம் ஆண்டுக்கான 12 மாத நிலுவையை உடனடியாக வழங்க வேண்டும்.

பஞ்சாப், ஆந்திர அரசு வழங்கியது போல சிறப்பு ஓய்வூதியம் 60 வயதுக்கு மேல் 5 சதவீதமும், 70 வயதுக்கு மேல் 10 சதவீதமும், 75 வயதுக்கு மேல் 15 சதவீதமும் வழங்க வேண்டும். மருத்துவப்படியை ரூ.ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும். ஓய்வூதியா் இறந்தால் நிவாரணத்தொகையாக ரூ.73 லட்சமும், உடனடி யாக ரூ.75ஆயிரமும் வழங்க வேண்டும். ஓய்வூதியா்களுக்கு அரசு பேருந்துகளில் கட்டணச் சலுகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் தீா்மானங்களாக நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.