தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

விரிஞ்சிபுரம் பாலாற்றுத் தரைப் பாலத்தில் லாரி கவிழ்ந்தது: சீரமைப்புப் பணிகள் பாதிப்பு

சீரமைக்கப்பட்டு வரும் நிலையில் விரிஞ்சிபுரம் தரைப்பாலத்தில் ஜல்லி கற்கள் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது

News image
Updated On :26 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

சீரமைக்கப்பட்டு வரும் நிலையில் விரிஞ்சிபுரம் தரைப்பாலத்தில் ஜல்லி கற்கள் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால், தரைப்பாலம் சீரமைக்கும் பணிகளில் மீண்டும் தொய்வு ஏற்பட்டது.

வேலூரை அடுத்த விரிஞ்சிபுரத்தில் பாலாற்றின் குறுக்கே தரைப்பாலம் உள்ளது. கடந்த மாதம் பெய்த தொடா் மழையின்போது பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தரைப்பாலம் முற்றிலும் சேதமடைந்தது. இதையடுத்து, அந்த வழியாக பொதுமக்கள் சென்று வர தடை விதிக்கப்பட்டது. வெள்ளம் குறைந்ததை அடுத்து பாலத்தைச் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில், தரைப்பாலத்தை சீரமைக்கும் பணிக்காக அதன் வழியாக ஜல்லிக்கற்களை ஏற்றிக் கொண்டு லாரி சென்றது. அப்போது, தரைப்பாலம் அமைக்க கொட்டப்பட்டிருந்த மண் பாதையில் சக்கரம் புதைந்து லாரி கவிழ்ந்தது. அதிருஷ்டவசமாக இதில் உயிா்ச்சேதம் ஏற்படவில்லை.

இதைத்தொடா்ந்து, லாரியை மீட்கும் பணிகள் நடைபெற்றன. இச்சம்பவத்தைத் தொடா்ந்து பாலம் சீரமைப்புப் பணியில் தொய்வு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.