எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

குடியாத்தம் அருகே கார் மோதி பெண் தொழிலாளர்கள் 2 பேர் பலி

குடியாத்தம் அருகே கார் மோதி 100 நாள் வேலைத் திட்ட பெண் தொழிலாளர்கள் 2 பேர் வியாழக்கிழமை உயிரிழந்தனர்.

News image
உயிரிழந்த பெண்கள்.
Updated On :25 பிப்ரவரி 2021, 1:09 pm

DIN

குடியாத்தம் அருகே கார் மோதி 100 நாள் வேலைத் திட்ட பெண் தொழிலாளர்கள் 2 பேர் வியாழக்கிழமை உயிரிழந்தனர்.
 
குடியாத்தம் ஒன்றியம், சேங்குன்றம் ஊராட்சியில் 100 நாள் வேலைத் திட்டத்தில் கால்வாய் தூரெடுக்கும்பணி நடைபெறுகிறது. இப்பணியில் ஈடுபட்டிருந்த அதே கிராமத்தைச் சேர்ந்த மாசிலாமணி மனைவி பூசணம்மாள்(60), பிச்சாண்டி மனைவி வசந்தம்மாள்(55) இருவரும் வியாழக்கிழமை மதியம் பணி முடிந்து வீடு திரும்பி்யுள்ளனர்.

அப்போது குடியாத்தத்திலிருந்து, கர்நாடக மாநிலம் கே.ஜி.எப் சென்ற கார் மோதியதில் இருவரும் பலத்த காயமடைந்து குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். வழியிலேயே இருவரும் உயிரிழந்தனர். விபத்தை ஏற்படுத்தி விட்டு வேகமாக சென்ற காரை அங்கிருந்த இளைஞர்கள்  இருசக்கர வாகனங்களில் விரட்டிச் சென்று, சைனகுண்டா சோதனைச் சாவடி அருகே மடக்கினர்.

தகவல் அறிந்து அங்கு சென்ற போலீஸார்,  கே.ஜி.எப்பைச் சேர்ந்த ஜெயன்னா மகன் கார் டிரைவர் மகேஷை(26) கைது செய்தனர். காரும் பறிமுதல் செய்யப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக கிராமிய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.