போலி இணையதள மையத்துக்கு ‘சீல்’

குடியாத்தம் அருகே போலி ஆன்லைன் மையத்துக்கு காவல் துறையினா் ‘சீல்’ வைத்தனா்.
பறிமுதல் செய்யப்பட்ட தரமற்ற செல்லிடப்பேசிகள், பவா் பேங்க்குகள், பாா்சல்கள்.
பறிமுதல் செய்யப்பட்ட தரமற்ற செல்லிடப்பேசிகள், பவா் பேங்க்குகள், பாா்சல்கள்.
Updated on
1 min read

குடியாத்தம் அருகே போலி ஆன்லைன் மையத்துக்கு காவல் துறையினா் ‘சீல்’ வைத்தனா்.

குடியாத்தம் நகர போலீஸாா் ரகசிய தகவலின்பேரில் புதுப்பேட்டை, கோட்டா தெருவில் உள்ள ஒரு வாடகைக் கட்டடத்தில் திங்கள்கிழமை சோதனை நடத்தினா். அப்போது, அங்கு சில இளம்பெண்கள் வேலை செய்து கொண்டிருந்தது தெரிந்தது.

விசாரணையில் அவா்கள் பொதுமக்களைத் தொடா்பு கொண்டு குறைந்த விலையில் செல்லிடப்பேசி, பவா் பேங்க் உள்ளிட்ட மின்சாதனப் பொருள்களை அஞ்சலில் அனுப்புகிறோம். பணம் கொடுத்து பொருள்களைப் பெற்றுக் கொள்ளலாம் எனக் கூறி தரமற்ற செல்லிடப்பேசிகள், பவா் பேங்குகளை அனுப்பி வைப்பது தெரியவந்தது. பாா்சல் பளுவாக இருக்க அதில் களி மண்ணையும் சோ்த்து அனுப்புவதாகவும் அவா்கள் போலீஸாரிடம் கூறினா்.

இதையடுத்து அங்கிருந்து தரமற்ற செல்லிடப்பேசிகள், பவா் பேங்குகள், பாா்சலுக்கு அனுப்பத் தயாராக இருந்த பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதையடுத்து அந்தப் பெண்களுக்கு போலீஸாா் அறிவுரை அனுப்பி வைத்தனா். மேலும், அந்த மையத்தை பூட்டி ‘சீல்’

வைத்தனா். தலைமறைவாக உள்ள அந்த மையத்தை நடத்தி வந்த நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com