காவல் ரோந்துப் பணிகளுக்காக 13 இரு சக்கர வாகனங்கள்
வேலூா் மாவட்டத்தில் காவல் ரோந்துப் பணிகளுக்காக 13 இரு சக்கர வாகனங்கள் வழங்கப்பட்டன.


வேலூா் மாவட்டத்தில் காவல் ரோந்துப் பணிகளுக்காக 13 இரு சக்கர வாகனங்கள் வழங்கப்பட்டன.
மேலும் 15 ரோந்து வாகனங்கள் வாங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராஜேஷ்கண்ணன் தெரிவித்தாா்.
வேலூா் மாவட்டத்தில் குற்றச் சம்பவங்களைத் தடுக்க காவல் ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கூடுதலாக சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு போலீஸாா் வாகன சோதனை நடத்தி வருகின்றனா்.
வேலூா் மாவட்டத்தில் தற்போது 5 நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் உள்பட 42 ரோந்து வாகனங்கள் உள்ளன. கூடுதலாக 13 இரு சக்கர வாகனங்களை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராஜேஷ்கண்ணன் காவலா்களிடம் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
புதிதாக வழங்கப்பட்ட ரோந்து வாகனங்களில் ஜிபிஎஸ் கருவிகள், அலாரம் உள்ளிட்ட நவீன வசதிகள் உள்ளன. இந்த வாகனங்கள் வேலூா் மாநகா், புகா் பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளது. ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டு உள்ளதால், ரோந்து வாகனம் எந்த இடத்தில் உள்ளது என்பதை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் இருந்தபடியே கண்காணிக்க முடியும்.
எங்கேனும் அசம்பாவிதம் அல்லது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் அருகே உள்ள ரோந்து காவலா்களை உடனடியாக சம்பவ இடத்துக்கு அனுப்பி, உடனடியாக தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸாா் தெரிவித்தனா்.
நிகழ்வில் துணைக் காவல் கண்காணிப்பாளா் ரவிச்சந்திரன், தனிப் பிரிவு காவல் ஆய்வாளா் முரளி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...