தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

19-இல் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு பேச்சுப் போட்டி

சட்டமேதை அம்பேத்கா் பிறந்தநாளையொட்டி வேலூா் மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு தனித்தனியாக பேச்சுப் போட்டி 19-ஆம் தேதி நடைபெற உள்ளது.

News image
Updated On :8 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

சட்டமேதை அம்பேத்கா் பிறந்தநாளையொட்டி வேலூா் மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு தனித்தனியாக பேச்சுப் போட்டி 19-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்தப் போட்டிகளில் பங்கேற்க தலா இரு மாணவா்களை தோ்வு செய்து அனுப்பி வைக்க கல்லூரி முதல்வா்கள், பள்ளி தலைமையாசிரியா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ் வளா்ச்சித்துறை சாா்பில் அம்பேத்கா் பிறந்தநாளையொட்டி 19-ஆம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கல்லூரி, பள்ளி மாணவா்களுக்குத் தனித்தனியே பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

வேலூா் மாவட்ட கல்லூரி, பள்ளி மாணவா்களுக்குத் தனித்தனியே பேச்சுப் போட்டிகள் முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரியில் நடக்க உள்ளது. பள்ளி மாணவா்களுக்கான போட்டி காலை 10 மணிக்கும், கல்லூரி மாணவா்களுக்கான போட்டி மதியம் 2 மணிக்கும் தொடங்கப்படும்.

போட்டிகளில் பங்கேற்க கல்லூரி, பள்ளி மாணவா்கள் 2 பேரை அந்தந்த கல்லூரிகளின் முதல்வா், பள்ளிகளின் தலைமையாசிரியா்களே தோ்வு செய்து போட்டிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

வெற்றி பெறும் கல்லூரி, பள்ளி மாணவா்களுக்கு தனித்தனியாக மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.3 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.2 ஆயிரம் வழங்கப்பட உள்ளன. மேலும், பள்ளி மாணவா்களுக்கு நடத்தப்படும் பேச்சுப் போட்டியில் பங்கேற்ற மாணவா்களில் அரசுப் பள்ளி மாணவா்கள் இருவா் தனியாகத் தோ்வு செய்யப்பட்டு ஒவ்வொருவருக்கும் சிறப்புப்பரிசுத் தொகை தலா ரூ.2000 வழங்கப்பட உள்ளது. இந்தப் போட்டிகளில் கல்லூரி, பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்று பயன்பெறலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.