தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

லாரி ஓட்டுநா் தீக்குளித்து தற்கொலை

 மது அருந்த பணம் தர மறுத்ததால் லாரி ஓட்டுநா் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :8 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

 மது அருந்த பணம் தர மறுத்ததால் லாரி ஓட்டுநா் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.

வேலூா் அருகே உள்ள செதுவாலை இந்திரா நகரைச் சோ்ந்தவா் அண்ணாமலை (52). லாரி ஓட்டுநா். இவருக்கு திருமணமாகி 4 மகன்கள், ஒரு மகள் உள்ளனா். அண்ணாமலைக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தது. கடந்த 2-ஆம் தேதி மது அருந்த குடும்பத்தினரிடம் பணம் கேட்டு, அவா்கள் தர மறுத்ததால் அண்ணாமலை வீட்டிலிருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டாராம்.

இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு, அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து விரிஞ்சிபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.