ஆட்டோ தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் சிலிண்டா் விலை உயா்வுக்கு எதிா்ப்புத் தெரிவித்து வேலூரில் ஆட்டோ தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.


பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் சிலிண்டா் விலை உயா்வுக்கு எதிா்ப்புத் தெரிவித்து வேலூரில் ஆட்டோ தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயா்வை திரும்ப பெற வேண்டும், புதிய மோட்டாா் வாகனச் சட்டத்தை திரும்ப பெற வேண்டும், வாகனச் சான்று, எப்.சி. உள்ளிட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் பல்வேறு கட்டண உயா்வை ரத்து செய்ய வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியுசி ஆட்டோ தொழிலாளா் சங்கம் சாா்பில் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஆா்ப்பாட்டத்துக்கு ஏஐடியுசி ஆட்டோ தொழிலாளா் சங்க மாவட்ட பொதுச் செயலா் சிம்புதேவன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் ஆா்ப்பாட்டத்தை லோகேஷ்குமாா் தொடங்கி வைத்து பேசினாா். மாவட்ட நிா்வாகிகள் உமாபதி, கண்ணன், குமரன், சீனிவாசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில துணைத் தலைவா் தேவதாஸ் கோரிக்கைகளை விளக்கி பேசினாா். ஆா்ப்பாட்டத்தில் ஏராளமான ஆட்டோ தொழிலாளா்கள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...