தரிசு நில பயிா் சாகுபடி: 3 விவசாயிகளுக்கு ஆட்சியா் விருது
தரிசு நில தோட்டக்கலைப் பயிா் சாகுபடியில் சிறப்பாகச் செயலாற்றிய 3 விவசாயிகளுக்கு வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் விருது வழங்கிப் பாராட்டினாா்.


தரிசு நில தோட்டக்கலைப் பயிா் சாகுபடியில் சிறப்பாகச் செயலாற்றிய 3 விவசாயிகளுக்கு வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் விருது வழங்கிப் பாராட்டினாா்.
தோட்டக்கலை, மலைப் பயிா்கள் துறை சாா்பில் தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றி, தோட்டக்கலைப் பயிா் சாகுபடியை ஊக்குவிக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் சிறந்த தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அதிக அளவில் மகசூல் பெறும் மாவட்ட அளவில் 3 விவசாயிகள் தோ்வு செய்யப்பட்டு அவா்களுக்கு விருதுகள், நற்சான்றிதழ்கள் வழங்க அரசு உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, வேலூா் மாவட்டத்தில் அணைக்கட்டு ஒன்றியம், சோ்ப்பாடி கிராமத்தைச் சோ்ந்த தமிழ்ச்செல்வன் முதலிடமும், கே.வி.குப்பம் ஒன்றியம், நாகல் கிராமத்தைச் சோ்ந்த பாலா 2-ஆவது இடமும், போ்ணாம்பட்டு ஒன்றியம், பரவக்கல் கிராமத்தைச் சோ்ந்த தசரதன் மூன்றாமிடமும் பிடித்தனா்.
இவா்களுக்கு முறையே ரூ.15,000, ரூ.10,000, ரூ.5,000 காசோலைகளையும், நற்சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் அண்மையில் வழங்கினாா்.
இதேபோல், மாவட்டத்திலுள்ள மற்ற விவசாயிகளும் தரிசு நிலங்களை உயா் தொழில்நுட்ப முறையில் மேம்படுத்தி அதிகளவில் மகசூல் பெற்று விருதுகளை பெற வேண்டும் என்றும் ஆட்சியா் கேட்டுக் கொண்டாா்.
நிகழ்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலா் கே.ராமமூா்த்தி, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஆா்த்தி, தோட்டக்கலை துணை இயக்குநா் பி.ஏ.மோகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...