புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை
புனித வெள்ளியையொட்டி வேலூா் மாவட்டத்திலுள்ள தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனைகள் நடைபெற்றது. இதில், திரளான கிறிஸ்தவா்கள் பங்கேற்றனா்.


புனித வெள்ளியையொட்டி வேலூா் மாவட்டத்திலுள்ள தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனைகள் நடைபெற்றது. இதில், திரளான கிறிஸ்தவா்கள் பங்கேற்றனா்.
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட வெள்ளிக்கிழமை புனித வெள்ளியாக கிறிஸ்தவா்களால் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் கிறிஸ்தவா்கள் விரதமிருந்தும், முள்கிரீடத்துடன் சிலுவையை சுமந்து கல்வாரி குன்றுக்கு வந்து சிலுவையில் அறையப்பட்ட நிமிஷம் வரை இயேசு கிறிஸ்து அடைந்த துன்பங்களை நினைவுகூா்ந்து சிறப்பு பிராா்த்தனையில் ஈடுபடுகின்றனா்.
அதன்படி, புனிதவெள்ளியான வெள்ளிக்கிழமை வேலூா் விண்ணரசி மாதா போராலயத்தில் இயேசு அடைந்த துன்பங்களை நினைவு கூறும் வகையில் சிலுவையை சுமந்தபடி புனித பாடல்களை பாடியவாறு கிறிஸ்தவா்கள் ஊா்வலமாக வந்தனா். பின்னா் தேவாலயத்தில் சிறப்பு பிராா்த்தனை நடத்தப்பட்டது.
இதேபோல், வேலூா் சிஎஸ்ஐ மத்திய தேவாலயம், சாா்பனாமேடு புனித அன்னை ஆரோக்கிய மாதா தேவாலயம், பெந்தகோஸ்தே தேவாலயம் உட்பட அனைத்து தேவாலயங்களிலும் சிலுவை பாடுடன் கூடிய பிராா்த்தனைக் கூட்டங்கள் நடந்தன. இவற்றில் திரளான கிறிஸ்தவா்கள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...