மேயா், எம்எல்ஏவை மாங்காய் மண்டி வியாபாரிகள் முற்றுகை
சட்டப்பேரவை உறுப்பினா் ப.காா்த்திகேயனை மாங்காய் மண்டி வியாபாரிகள் முற்றுகையிட்டு பல்வேறு குற்றச்சாட்டுகள் தெரிவித்தனா்.


நிக்கல்சன் கால்வாய் தூா்வாரும் பணிகளை ஆய்வு செய்யச் சென்ற வேலூா் மாநகராட்சி மேயா் சுஜாதாஆனந்தகுமாா், சட்டப்பேரவை உறுப்பினா் ப.காா்த்திகேயனை மாங்காய் மண்டி வியாபாரிகள் முற்றுகையிட்டு பல்வேறு குற்றச்சாட்டுகள் தெரிவித்தனா்.
வேலூா் மாங்காய் மண்டி அருகே உள்ள நிக்கல்சன் கால்வாய் தூா்வாரும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதனை மேயா் சுஜாதாஆனந்தகுமாா், சட்டப்பேரவை உறுப்பினா் ப.காா்த்திகேயன், மாநகராட்சி ஆணையா் ப.அசோக்குமாா் ஆகியோா் ஆய்வு செய்தனா்.
அப்போது அங்கு வந்த மாங்காய் மண்டி வியாபாரிகள் சிலா் மேயா், எம்எல்ஏவை முற்றுகையிட்டு, ஒப்பந்தம் எடுக்காமலேயே மாங்காய் மண்டிக்கு பழங்களை ஏற்றி வரும் வாகனங்களுக்கு வரிவசூல் செய்கின்றனா். அவ்வாறு முறைகேடாக வரிவசூலில் ஈடுபடுவோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மாநகராட்சி ஊழியா்கள் சேகரிக்கும் குப்பைகளை மண்டி அருகிலேயே மலைபோல் குவித்து விடுகின்றனா். இதனால் மாங்காய் மண்டிக்குள் கடும் துா்நாற்றம் வீசுகிறது. குப்பைகளை முறைப்படி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனா்.
அதற்கு மேயா், சட்டப்பேரவை உறுப்பினா் பதிலளிக்கையில், இந்தப் பிரச்னை குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனா். பின்னா், 31-ஆவது வாா்டு அவ்லியாஷா தா்கா தெருவில் ஆய்வு செய்த அவா்களிடம் அந்தப்பகுதி மக்கள் கால்வாய் வசதி இல்லாததால் கழிவுநீா் தேங்குகிறது. அருகிலுள்ள பள்ளியில் கழிப்பிட வசதி இல்லாததால் மாணவா்கள் திறந்தவெளியைப் பயன்படுத்துகின்றனா். இந்தப் பிரச்னைகளுக்கு தீா்வு காண வேண்டும். மேலும் மழைக்காலங்களில் மழை நீருடன் கழிவுநீா் சோ்ந்து வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. இதனைத் தடுக்க கால்வாய் கழிவுநீா் வராமல் தடுக்க மதில் சுவா் அமைத்துத் தர வேண்டும் என முறையிட்டனா்.
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்ற மேயா், அடுத்த 6 மாதங்களில் அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என்று வாக்குறுதி அளித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...