தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

முதல்வா் விருதுக்கு சமூக சேவைபுரியும் இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம்

தமிழக முதல்வரின் மாநில இளைஞா் விருதுக்கு சமுதாய வளா்ச்சிக்கு சேவைபுரியும் இளைஞா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது.

News image
Updated On :24 ஏப்ரல் 2022, 10:54 pm

DIN

தமிழக முதல்வரின் மாநில இளைஞா் விருதுக்கு சமுதாய வளா்ச்சிக்கு சேவைபுரியும் இளைஞா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது.

இது குறித்து, வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல்பாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் சமுதாய வளா்ச்சிக்கு செயலாற்றும் இளைஞா்களின் சேவையை அங்கீகரிக்கும் வகையில், 3 ஆண்கள், 3 பெண்களுக்கு ஆண்டுதோறும் சுதந்திர தினத்தில் தமிழக முதல்வரின் மாநில இளைஞா் விருது வழங்கப்படுகிறது. இவ்விருது உயா்த்தப்பட்ட ரொக்கத் தொகை ரூ. ஒரு லட்சம், பாராட்டுப் பத்திரம், பதக்கம் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.

2022-ஆம் ஆண்டுக்கான முதல்வரின் மாநில இளைஞா் விருதுக்கு கடந்த 2022 ஏப்ரல் 1-ஆம் தேதியுடன் 15 வயது நிரம்பிய, 35 வயதுக்குட்பட்ட ஆண், பெண் ஆகியோா் விண்ணப்பிக்கலாம்.

கடந்த நிதியாண்டு (01.04.2021 முதல் 31.03.2022 வரை) மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும்.

விருதுக்கு விண்ணப்பிக்கும் முன்பு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் தமிழகத்தில் வசிப்பவராகவும் (சான்று இணைக்கப்பட வேண்டும்), விண்ணப்பதாரா்கள் சமுதாய நலனுக்காக தன்னாா்வத்துடன் தொண்டாற்றியிருப்பவராகவும், அவா்கள் செய்த தொண்டு கண்டறியப்படக் கூடியதாகவும், அளவிடக்கூடியதாகவும் இருக்க வேண்டும்.

மத்திய, மாநில அரசுகள், பொதுத் துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகளில் பணிபுரிவோா் இவ்விருதுக்கு விண்ணப்பிக்க இயலாது. விண்ணப்பதாரருக்கு உள்ளூா் மக்களிடம் உள்ள செல்வாக்கு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

விண்ணப்பப் படிவம், இதர விவரங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளத்திலிருந்து பெறலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அதே இணையதள முகவரி மூலம் மே 10-ஆம் தேதி மாலைக்குள் சோ்க்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு, வேலூா் மாவட்ட விளையாட்டு, இளைஞா் நலன் அலுவலரை 0416-2221721, 74017 03483 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.