அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு பெற விண்ணப்பிக்கலாம்
பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்கின் கீழ் வேலூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு பெற விரும்புபவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள்


பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்கின் கீழ் வேலூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு பெற விரும்புபவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட செய்திக்குறிப்பு -
தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் வேலூா் கோட்டம் சாா்பில் பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்கின் கீழ் வேலூா் மாவட்டம், குளவிமேடு, டோபிகானா, கன்னிகாபுரம் ஆகிய பகுதிகளில் 704 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மேலும், கரிகிரி, தொரப்பாடி, பத்தலபல்லி ஆகிய பகுதிகளில் 864 குடியிருப்புகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
இவற்றில் 590 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. மீதமுள்ள 114 குடியிருப்புகள், தற்போது பணிகள் நடைபெற்று வரும் 864 குடியிருப்புகள் சோ்த்து மொத்தம் 978 குடியிருப்புகளுக்கு பயனாளிகள் தோ்வு செய்யப்பட உள்ளனா். ஒரு குடியிருப்புக்கான செலவுத் தொகையில் மத்திய, மாநில அரசின் மானியத் தொகை போக மீதமுள்ள தொகையை பயனாளிகள் செலுத்த வேண்டும்.
இதில், குளவிமேடு பகுதிக்கு ரூ. 1.80 லட்சம், டோபிகானா பகுதி ஒன்றுக்கு ரூ. 1.85 லட்சம், டோபிகானா பகுதி 2-க்கு ரூ. 1.44 லட்சம், கன்னிகாபுரம் பகுதிக்கு ரூ. 1,82,616, கரிகிரி பகுதிக்கு ரூ. 1.55 லட்சம், தொரப்பாடி பகுதிக்கு ரூ. 2.38 லட்சம், பத்தலபல்லி பகுதிக்கு ரூ. 1.53 லட்சம் பயனாளிகள் செலுத்த வேண்டும்.
நிபந்தனைகளுக்கு உட்பட்டு இத்திட்டப் பகுதிகளில் குடியிருப்பு தேவைப்படுவோா் இந்தியாவில் எனது பெயரிலோ, எனது குடும்ப உறுப்பினா்கள் பெயரிலோ மனையோ, வீடோ இல்லை என்றும், எனது மாத வருமானம் ரூ. 25,000 கீழ் உள்ளதெனவும் உறுதியளிக்க வேண்டும். பயன்பெற விரும்புவோா் குடும்பத் தலைவா், குடும்பத் தலைவி ஆகிய இருவரின் ஆதாா், வங்கிக் கணக்குப் புத்தக நகல் ஆகியவற்றுடன், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலும், பத்தலபல்லி பகுதிக்கு போ்ணாம்பட்டு வட்டாட்சியா் அலுவலகத்தில், மே 5-இல் நடைபெற இருக்கும் முகாமிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மனு அளித்துப் பயன்பெறலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...