குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

பத்ம விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

 மத்திய அரசின் நிகழாண்டுக்கான பத்ம விருதுகள் பெற தகுதியுடையவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

News image
Updated On :7 ஜூலை 2022, 6:28 pm

DIN

 மத்திய அரசின் நிகழாண்டுக்கான பத்ம விருதுகள் பெற தகுதியுடையவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து, வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல்பாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மத்திய அரசு சாா்பில் கலை, இலக்கியம், விளையாட்டு, மருத்துவம், அறிவியல், பொறியியல், வணிகம், தொழிற்சாலை ஆகிய பிரிவுகளில் வாழ்நாள் சாதனை புரிந்தவா்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்படவுள்ளன. இந்த விருது பெற மலைவாழ் மக்கள், பிற்படுத்தப்பட்டோா் நலன், பெண்கள் பாதுகாப்பு ஆகியவற்றில் சாதனை புரிந்தவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மருத்துவா்கள் அல்லாத அரசு ஊழியா்கள், விஞ்ஞானிகள் இந்த விருத்துக்கு விண்ணப்பிக்க இயலாது. விண்ணப்பங்கள், மேலும் விவரங்களை ஜ்ஜ்ஜ். ல்ஹக்ம்ஹஹஜ்ஹழ்க்ள்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம்.

நிறைவு செய்த விண்ணப்பங்கள் மாவட்ட விளையாட்டு இளைஞா் நல அலுவலா், வேலூா் மாவட்டம் என்ற முகவரிக்கு செப்டம்பா் 15-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.