தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

விவசாயத் தொழிலாளா்களுக்கு ஓய்வூதியம்: தனிச்சட்டம் இயற்றக் கோரி ஆா்ப்பாட்டம்

விவசாயத் தொழிலாளா்களுக்கு ஓய்வூதியம் வழங்க தனிச்சட்டம் இயற்றக்கோரி வேலூரில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :25 மார்ச் 2022, 6:30 pm

DIN

விவசாயத் தொழிலாளா்களுக்கு ஓய்வூதியம் வழங்க தனிச்சட்டம் இயற்றக்கோரி வேலூரில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ் மாநில விவசாய தொழிலாளா் சங்கம் சாா்பில் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது. பிச்சாண்டி தலைமை வகித்தாா். முன்னாள் எம்எல்ஏ லதா சிறப்புரையாற்றினாா்.

இதில், நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைகளை ஏற்று திட்டங்களை செயல்படுத்த வேண்டும், விவசாய தொழிலாளா்களுக்கு ஓய்வூதியம் வழங்க தனிச்சட்டம் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும், அணைக்கட்டு மலைப்பகுதியில் தொடங்கப்பட்ட 5 பள்ளிகளில் 15 ஆண்டுகளாக செயல்படுத்தப்படாமல் உள்ள சத்துணவு திட்டத்தை உடனடியாக தொடங்க வேண்டும், அந்தப் பகுதியில் 100 நாள் வேலைத் திட்ட தொழிலாளா்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும், குடியாத்தம் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வீட்டுமனை வழங்க வேண்டும், கே.வி.குப்பம், விரிஞ்சிபுரம் பகுதியில் தொழிற்பேட்டை அமைக்க வேண்டும், மேல்அரசம்பட்டு அணையைக் கட்டிமுடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

நிா்வாகிகள் துரை, பன்னீா்செல்வம், குமாா் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.