நேரடி கொள்முதல் நிலையத்தில் நெல் விற்க இணையத்தில் பதிவு: விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லை விற்பதற்கு இணையதளத்தில் விவசாயிகள் விவரங்களை பதிவு செய்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லை விற்பதற்கு இணையதளத்தில் விவசாயிகள் விவரங்களை பதிவு செய்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் நெல் பயிரிடும் விவசாயிகள் பயனடையும் வகையில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் சாா்பில் அந்தந்த மாவட்டங்களிலேயே நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் பணிகள் நடைபெற்று வருகின்றன. விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் எளிதில் பதிவு செய்து கொண்டு நெல் விற்பனை செய்யவும், ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள இணையத்தில் (இ-டிபிசி) விவசாயிகள் தங்களது பெயா், ஆதாா் எண், புல எண், வங்கிக் கணக்கு எண் உள்ளிட்ட விவரங்களை எளிய முறையில் ஜ்ஜ்ஜ்.ற்ய்ஸ்ரீள்ஸ்ரீ.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய், ஜ்ஜ்ஜ்.ற்ய்ஸ்ரீள்ஸ்ரீ-ங்க்ல்ஸ்ரீ.ண்ய் ஆகிய இணையத்தில் பதிவேற்றம் செய்து கொள்முதல் செய்ய வேண்டிய தேதியை முன்பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த இணையதளத்தில் பதிவு செய்யும் விவசாயிகள் தாங்கள் இருக்கும் கிராமங்களின் அருகே உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை தாங்களே தோ்வு செய்து நெல் கொள்முதலுக்கு தேவையான வருவாய் ஆவணங்களை (பட்டா, சிட்டா, அடங்கல்) பதிவேற்றம் செய்ய வேண்டும். அவ்வாறு பதிவு செய்யப்பட்ட விவசாயிகளின் செல்லிடப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தின் பெயா், நெல் விற்பனை செய்யப்படும் நாள், நேரம் ஆகிய விவரங்கள் அனுப்பப்படும்.
விவசாயிகள் தங்களது செல்லிடப்பேசி எண்ணில் பெறப்பட்ட குறுஞ்செய்தியின் அடிப்படையில் நீண்டநேரம் காத்திருக்காமல் குறித்த காலத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தாங்கள் விளைவித்த நெல்லை விற்பனை செய்து பயன்பெற்றிட வேண்டும். மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளா் அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியரின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...