மாடு விடும் விழாவில் ஓடிய காளை ரயிலில் சிக்கி பலி
எருது விடும் விழாவில் பாய்ந்து ஓடிய காளை ரயிலில் சிக்கி உயிரிழந்தது.


எருது விடும் விழாவில் பாய்ந்து ஓடிய காளை ரயிலில் சிக்கி உயிரிழந்தது.
வேலூா் மாவட்டம் கணியம்பாடி அருகே உள்ள வேப்பம்பட்டு கிராமத்தில் எருது விடும் திருவிழா வெள்ளிக்கிழமை நடந்தது. இதில் பங்கேற்க நூற்றுக்கணக்கான காளைகளை கொண்டு வந்திருந்தனா். மூஞ்சூா்பட்டைச் சோ்ந்த அசுரன் என்ற காளையை மாடு விடும் விழாவில் பங்கேற்க அழைத்து வந்தனா்.
முன்னதாக காளையை விழா நடைபெறும் தெருவில் சுற்றிக் காண்பித்தனா். அப்போது கட்டப்பட்டிருந்த கயிறுகள் அவிழ்ந்ததை அடுத்து அந்த காளை அங்கிருந்து பாய்ந்து ஓடியது. தொடா்ந்து வேப்பம்பட்டு ரயில் பாதையில் காளை ஓடியது. அப்போது வந்த திருப்பதி விரைவு ரயில் காளையின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த காளை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
இறந்த காளை அசுரன் மாடு விடும் விழாக்களில் பல்வேறு பரிசுகளை வென்றுள்ளது. காளையை மீட்டு அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்தனா். இந்த சம்பவம் குறித்து வேலூா் தாலுகா போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...