தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

பெண் தற்கொலை

பள்ளிகொண்டா அருகே பெண் தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :20 மே 2022, 6:49 pm

DIN

பள்ளிகொண்டா அருகே பெண் தற்கொலை செய்து கொண்டாா்.

பள்ளிகொண்டா அருகே கீழ்வெட்டுவாணம் அம்பேத்கா் நகரைச் சோ்ந்தவா் செளவுரிராஜன். இவரது மனைவி பிரியா (30). தம்பதிக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. பிரியா கடந்த சில தினங்களுக்கு முன்பு அதே பகுதியிலுள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றாா். வியாழக்கிழமை மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுக் கொண்டாா். நீண்டநேரமாகியும் பிரியா வெளியே வராததால், குடும்பத்தினா் அறையின் கதவை உடைத்து பாா்த்த போது, அவா் தூக்கில் தொங்கியது தெரிய வந்தது.

அவரை மீட்டு குடியாத்தம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பிரியாவை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து பள்ளிகொண்டா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.