எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

பாஜக வளர்கிறதா? அமைச்சர் துரைமுருகன் கருத்துக்கு திருமாவளவன் விளக்கம்

பாஜக தமிழகத்தில் வளர்ந்து வருவதாக அமைச்சர் துரைமுருகன் நகைச்சுவையாக பதில் அளித்துள்ளார் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் விளக்கமளித்துள்ளார்.

News image
Updated On :20 நவம்பர் 2022, 11:00 am

DIN

பாஜக தமிழகத்தில் வளர்ந்து வருவதாக அமைச்சர் துரைமுருகன் நகைச்சுவையாக பதில் அளித்துள்ளார் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் விளக்கமளித்துள்ளார்.

வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், 10% இட ஒதுக்கீடு என்பது அரசியலமைப்புச் சட்டத்தின்படி தவிர்க்கக் கூடியதாகும். சமூக நீதியை நீர்த்துப் போகிற செயல். ஏழைகளுக்கு உதவுவதை யாரும் எதிர்க்கவில்லை. முன்னேறிய சமூகமாக இருந்தாலும் மிகவும் பின்தங்கிய சமூகமாக இருந்தாலும் ஏழைகளுக்கு இலவசமான கல்வி வழங்கலாம், கடன் உதவிகளை வழங்கலாம், கல்விக்கான உதவித்தொகை வழங்கலாம். தொழில் துவங்க கடன் உதவிகளை வழங்கலாம், இப்படி பல நலத் திட்டங்களை அரசு செய்யலாமே தவிர பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படுவது என்பது அரசியல் அமைப்புச் சட்டம் உறுதிப்படுத்தி இருக்கிற சமூக நீதிக் கோட்பாடு சிதைக்கப்படும் வகையில் இந்த நிலைப்பாட்டை பாஜக அரசு செயல்பட்டு வருகிறது அதிர்ச்சி அளிக்கிறது. இதனை எதிர்த்து விடுதலை சிறுத்தை கட்சி சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளோம். அதற்கான ஏற்பாடுகளை நடந்து வருகின்றன.

பொதுவாக இட ஒதுக்கீடு பிரச்னையாக மட்டும் பார்க்காமல் இதன் பின்னணியில் உள்ள கோட்பாட்டை அரசியலையும் பார்க்க வேண்டும்.  விளிம்பு நிலையில் இருக்கிற மக்களுக்கு வழங்கப்படுகிற இட ஒதுக்கீடு சதவிகிதம், சமூக நீதி கோட்பாட்டோடு தொடர்புடையது. சமூக நீதி என்பது ஏழை பணக்காரன் என்ற அடிப்படையில் உருவானது அல்ல. பிறப்பின் அடிப்படையில் உயர்வு, தாழ்வு என்ற அடிப்படையில் சமூகத்தில் எவ்வளவு உயர்ந்ததாக இருந்தாலும் சூத்திரர்களையும் அவர்கள் சார்ந்து வாழ்கின்ற தலித்களையும் பழங்குடியினரையும் இழிவுபடுத்தும் நிலை ஏற்படுகிறது. பணக்காரராக இருந்தாலும் கூட அவர்கள் கீழ் ஜாதியைச் சார்ந்தவர்கள் சூத்திரர்கள் என்கிற உளவியல் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதை சரி செய்வதற்கு கல்வியிலும் வேலையிலும் இட ஒதுக்கீடு அளித்து அவர்களின் உளவியல் மேம்பாட்டை உறுதிப்படுத்துவது பொருளாதார மேம்பாட்டை சரி படுத்துவதல்ல பொருளாதார மேம்பாடு வேறு சமூக உளவியல் மேம்பாடு என்பது வேறு சமூக நீதி கோட்பாடு என்பது சமூக உளவியல் மேம்பாட்டு காணுது.

எனவே அதை நீர்த்துப்போக செய்கிற பத்து சதவீத இட ஒதுக்கீடு. எல்லாத் துறைகளிலும் என்பது சதவீதத்துக்கு மேல் ஆதிக்கம் செலுத்தக் கூடியவர்கள் உள்ளனர், இது அனைவருக்கும் தெரியும். அனைத்து பணிகளிலும் 80 சதவீதத்திற்கு மேல் பிராமணர்கள் உள்ளிட்ட உயர்ந்த ஜாதியினர் உள்ளனர். அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது கூறுவது அப்பட்டமான பொய். என்பது சதவீதத்தை பயன்படுத்தக் கூடியவர்கள் வாய்ப்பு மறுக்கப்படுகிறது அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குகிறோம் என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது. எனவே தான் பொருளாதார அளவுகோலாக சமூக நீதி அளவுகோலா என்பதே நாம் பார்க்க வேண்டும் ஏழையா பணக்காரனா என்பதை பார்க்க கூடாது. எனவே சங்பரிவார் உள் நோக்கம் சமூக நீதியை தகர்ப்பது என்பதுதான். ஆகவேதான் 10 சதவீத இட ஒதுக்கீடு உள்நோக்கத்தை விமர்சிக்கிறோம். பாஜக அசுரவேகத்தில் வளர்ந்து வருவதாக துரைமுருகன் கூறியுள்ளார் என செய்தியாளர்கள் கேட்டதற்கு, துரைமுருகன் நகைச்சுவையாக பதில் அளித்துள்ளார். அவர் நகைச்சுவை பேச்சாளர்.

ஆளுநர் என்பவர் அரசியலமைப்புச் சட்டத்தின் படி நியமிக்கப்பட்டவர். மாநில அரசுகளுக்கு உதவுவதற்காக ஆளுநர்கள் நியமிக்கப்படுகின்றனர். மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடைவெளி ஏற்படுத்தப்படாமல் இருப்பதற்காக நியமிக்கப்படுகின்றனர். இவர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு ஒரு பாலம் போன்றவர். மாநில அரசு எடுக்கும் முடிவுக்கு ஆளுநர்கள் கட்டுப்பட்டவர்கள் அதை உணராமல் தமிழக ஆளுநர் செயல்படுகிறார். பாஜக ஆளும் மாநிலங்களில் நியமிக்கப்பட்டுள்ள அத்தனை ஆளுநர்களும் மாநில அரசுகளுக்கு நெருக்கடியை தருகிறார்கள். ஆர்எஸ்எஸ் தொண்டர்களாகவும் இருந்து பணியாற்றுகிறார்கள். ஆளுநர்கள் அரசியல் பேசக்கூடாது என்பது அல்ல. ஆனால் ஒரு இயக்கத்தைச் சார்ந்து அரசியலை பேசக்கூடாது. ஆளுநர் ரவி ஆர்எஸ்எஸ் காரராக இருப்பதால் எதிர்க்கிறோம். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டவர்கள் அரசியல் அமைப்புச் சட்டத்தின் படி விடுதலை செய்யப்படவில்லை .

உச்ச நீதிமன்றத்தின் அடிப்படையிலேயே அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். மேற்கொண்டு சீர் ஆய்வு மனு செய்தாலும் மீண்டும் உச்ச நீதிமன்றம் இந்த கருத்தைதான் தெரிவிக்கும். உச்சநீதிமன்றம் அவர்களை விடுதலை செய்துள்ளது. தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் அவர்கள் விடுதலை செய்யப்படவில்லை.  அவர்கள் விடுதலை செய்தது அரசின் முடிவல்ல. சட்டத்தின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டவர்கள். இது வரவேற்கப்பட வேண்டிய நிலைப்பாடு. பாஜக பார்த்து தமிழக அரசு பயப்படுகிறது என்று எடப்பாடி பழனிச்சாமி கூறி உள்ளாரே என செய்தியாளர்கள் கேட்டதற்கு, அதிமுகவைப் பார்த்து திமுக பயப்படுகிறது என்று எடப்பாடி சொல்லி இருந்தால் அது வரவேற்கத்தக்கதாகவும் ஆனால் அவர் பாஜகவின் ஆளாகத்தான் பேசுகிறார்.

அதிமுகவை கைவிட்டு விட்டார் அதிமுகவைத் கரைந்து போக செய்துள்ளார் என்று தான் தோன்றுகிறது என திருமாவளவன் கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.