வேலூர்: ராஜுவ் காந்தி கொலை வழக்கில் பரோலில் உள்ள நளினி விருதம்பட்டு காவல் நிலையத்தில் கையொப்பமிட்டு விட்டு இன்று விடுதலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சிறையில் முருகனை சந்தித்தார். ஆனால் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினார்.
வேலூர் மாவட்டம், காட்பாடி பிரம்மபுரத்தில் ராஜுவ் காந்தி கொலை வழக்கில் பரோலில் உள்ள நளினி அவர் வீட்டில் தங்கியுள்ளார். இந்த நிலையில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விடுதலை கிடைக்கும் என அனைவரும் எதிர்ப்பார்த்தனர்.
இதையும் படிக்க: 25 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
பரோலில் இருப்பதால் விருதம்பட்டு காவல் நிலையத்திற்கு நளினி பலத்த பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டு நளினி கையொப்பம் இட்டார். இந்த நிலையில் பின்னர் தனக்கு விடுதலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் முருகனை சந்திக்க சிறைக்கு அழைத்து செல்லப்பட்டு பேசிவிட்டு வந்தார்.
ஆனால் சென்னை உயர்நீதிமன்றம் இவரை விடுதலை செய்ய முடியாது என கூறியதால் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரசியலுக்கு பெண்களே எளிய இலக்குகளா? ஜோதிமணி கடும் கண்டனம்

உதயநிதி ஸ்டாலின் கைது? நீலாங்கரை வீட்டின் முன்பு போலீஸ் குவிப்பு!

போதைப் பொருள் கடத்தல்! சௌதி அரேபியாவில் இந்தியருக்கு மரண தண்டனை

ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கைது செய்துவிடுவதாக தொழிலதிபரை மிரட்டிய காவல் ஆய்வாளர் கைது!
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



