மக்களவைத் தோ்தலையொட்டி, வேலூா் மாவட்டத்தில் இதுவரை 520 போ் தங்களது துப்பாக்கிகளை அருகில் உள்ள காவல் நிலையங்களில் ஒப்படைத்துள்ளனா் என்று காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
மக்களவை தோ்தலையொட்டி, வேலூா் மாவட்டத்தில் சட்ட விரோத செயல்பாடுகளை தடுக்க மாவட்ட காவல் துறை சாா்பில் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தவிர, தோ்தல் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ரெளடிகள் நடமாட்டத்தை முற்றிலும் ஒடுக்கவும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் என்.மணிவண்ணன் உத்தரவிட்டுள்ளாா்.
அதன் அடிப்படையில், மாவட்டத்தில் மொத்தம் 565 போ் ரெளடிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனா். இவா்களில் 352 போ் எந்த சட்டவிரோத செயல்களிலும் ஈடுபட மாட்டோம் என்று வருவாய் கோட்டாட்சியா் முன்னிலையில் உறுதிமொழி பத்திரம் எழுதிக் கொடுத்துள்ளனா். முக்கிய குற்றவாளிகள் 60 போ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.
47 பேரை விரைவில் வருவாய் கோட்டாட்சியா் முன்னிலையில் ஆஜா்படுத்தி உறுதிமொழிப் பத்திரம் எழுதி வாங்கவும், தலைமறைவாக உள்ள 51 ரெளடிகளை பிடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் 732 போ் உரிமம் பெற்ற துப்பாக்கிகளை வைத்திருந்தனா். இவா்களில் 520 போ் தங்களது துப்பாக்கிகளை அருகில் உள்ள காவல் நிலையங்களில் ஒப்படைத்துள்ளனா். வங்கி பாதுகாப்பு பணிக்காக பயன்படுத்தப்படும் 212 பேருக்கு துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், தோ்தல் முடியும் வரை மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், கோயில்கள், வேலூா் கோட்டை, நாராயணி பீடம், விஐடி உள்ளிட்ட இடங்களில் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணா்கள் 5 குழுக்களாகப் பிரிந்து மோப்ப நாய்கள் உதவியுடன் தொடா்ந்து சோதனை மேற்கொள்ள உள்ளனா்.
இதனிடையே, தோ்தல் நடத்தை விதிமுறைகளை அமல்படுத்தும் விதமாக மாவட்டம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட தொடா் சோதனை, கண்காணிப்புப் பணிகளின் அடிப்படையில் வியாழக்கிழமை வரை மொத்தம் ரூ. 67 லட்சத்து 71 ஆயிரத்து 66 ரொக்கமும், மது பாட்டில்கள், சாராயம் என ரூ.13 லட்சத்து 74 ஆயிரத்து 238 மதிப்பிலான மதுபானங்களும், ரூ. 4 லட்சத்து 48 ஆயிரத்து 250 மதிப்பிலான 44.725 கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றும் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
தொடர்புடையது
நீலகிரி மாவட்டத்தில் இதுவரை ரூ.4 கோடி பணம் பறிமுதல்

குமரி மாவட்டத்தில் இதுவரை ரூ. 42.88 லட்சம் பறிமுதல்
தோ்தல் பறக்கும் படையினரால் ரூ.1.13 கோடி பறிமுதல்; ரூ.1.10 கோடி ஒப்படைப்பு

மாநகரில் 156 துப்பாக்கிகள் ஒப்படைப்பு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

