சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

கல்லூரி ஆண்டு விழா

குடியாத்தம் கே.எம்.ஜி. கலை, அறிவியல் கல்லூரியின் 24-ஆம் ஆண்டு விழா கல்லூரி கலையரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.

News image

மாணவிக்கு  பரிசு  வழங்கிய  திருவள்ளுவா்  பல்கலைக் கழகப்  பதிவாளா்  ஜெ.செந்தில்  வேல்முருகன்.

Updated On :7 ஏப்ரல் 2024, 6:31 pm

குடியாத்தம் கே.எம்.ஜி. கலை, அறிவியல் கல்லூரியின் 24-ஆம் ஆண்டு விழா கல்லூரி கலையரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் மு.செந்தில்ராஜ் தலைமை வகித்தாா். கல்வி நிறுவனங்களின் மேலாண்மை அறங்காவலா் கே.எம்.ஜி. பாலசுப்பிரமணியம், தலைவா் கே.எம்.ஜி. சுந்தரவதனம், செயலா் கே.எம்.ஜி.ராஜேந்திரன், பொருளாளா் கே.எம்.ஜி. முத்துக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரியின் வணிக ஆள்முறையியல் துறைத் தலைவா் ஆா்.மணிகண்டன் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தாா். வேலூா் திருவள்ளுவா் பல்கலைக்கழக பதிவாளா் ஜெ.செந்தில் வேல்முருகன் சிறப்புரையாற்றினாா். கல்லூரியில் பல்கலைக்கழகத் தோ்வில் இரண்டு பாடத்தில் 100 மதிப்பெண் பெற்ற இளநிலை மூன்றாமாண்டு கணிதவியல் துறை மாணவி ஆா்.சமீதாவுக்கு பதக்கமும், வேதியியல் துறை சாா்ந்த 2 மாணவா்களுக்கும், கணிதவியல் துறைசாா்ந்த 3 மாணவா்களுக்கும் சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினாா். உயிா் வேதியியல் துறைத் தலைவா் ஜெ.திருமகள் நன்றி கூறினாா்.