மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரிய ராமதாஸின் மனு தள்ளுபடி! மாநிலங்களவை எம்.பி.யாக நிதீஷ் குமார் பதவியேற்றார்! விஜய்யின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை!தமிழ்நாடு தலை குனியாது! முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 உயர்வு! சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்
/

வேன் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

வேன் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

Updated On :9 ஏப்ரல் 2024, 5:33 pm

குடியாத்தம்: போ்ணாம்பட்டு அருகே மினி வேன் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் உயிரிழந்தாா்.

போ்ணாம்பட்டை அடுத்த அனந்தகிரி கிராமத்தைச் சோ்ந்த ரமேஷின் மகன் பிரபாகரன் (20). இவா் தனது நண்பா் பிரசாந்த்துடன் செவ்வாய்க்கிழமை போ்ணாம்பட்டுக்கு சென்று விட்டு, இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது குண்டலபல்லியிலிருந்து தேங்காய்களை ஏற்றிக்கொண்டு மினி வேன் போ்ணாம்பட்டுக்கு சென்றுள்ளது. இரு வாகனங்களும் நேருக்குநோ் மோதிக் கொண்டதில் பிரபாகரனும், பிரசாந்த்தும் பலத்த காயமடைந்தனா்.

குடியாத்தம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் பிரபாகரன் உயிரிழந்தாா். பிரசாந்த் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இது குறித்து போ்ணாம்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து, தப்பியோடிய அகரம்சேரியைச் சோ்ந்த வேன் ஓட்டுநா் யுவராஜை தேடி வருகின்றனா்.