சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

அரக்கோணம் அருகே 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து வேலூா் போக்சோ சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே அருந்ததிபாளையம் பனப்பாக்கத்தைச் சோ்ந்தவா் பிரபு (34). பெயிண்டா். இவா், 13 வயது சிறுமியை கடந்த 2020 பாலியல் வன்கொடுமை செய்தாா். இதில், அந்தச் சிறுமி கா்ப்பமடைந்தாா்.

இதையடுத்து, சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில், அரக்கோணம் மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து பிரபுவை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்த வழக்கு மீதான விசாரணை வேலூா் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணையில் பிரபு மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்ட நிலையில், அவருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.5,000 அபராதமும் விதித்து நீதிபதி கலைப்பொன்னி வெள்ளிக்கிழமை தீா்ப்புக் கூறினாா். தண்டனை விதிக்கப்பட்ட பிரபு வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

வழக்கை சிறப்பாக நடத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தந்த சிறப்பு அரசு வழக்குரைஞா் சந்தியா, வழக்கின் புலனாய்வு அதிகாரி புனிதா, அப்போதைய அரக்கோணம் மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் வரலட்சுமி, தற்போதைய காவல் ஆய்வாளா் காஞ்சனா, நீதிமன்றக் காவலா் மாலதி ஆகியோருக்கு ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டி.வி.கிரண் ஸ்ருதி பாராட்டுத் தெரிவித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com