கைது செய்யப்பட்ட ரஜினி, அவரது மனைவி பாக்கியலட்சுமி.
கைது செய்யப்பட்ட ரஜினி, அவரது மனைவி பாக்கியலட்சுமி.

ரூ.13.12 லட்சம் மோசடி - நிதிநிறுவன ஊழியா் மனைவியுடன் கைது

வேலூா்: வாடிக்கையாளா்களிடம் வசூலிக்கப்பட்ட ரூ.13.12 லட்சம் தொகையை நிறுவனத்தில் செலுத்தாமல் மோசடி செய்ததாக தனியாா் நிதிநிறுவனத்தின் வேலூா் கிளை ஊழியா் மனைவியுடன் கைது செய்யப்பட்டுள்ளாா்.

வேலூா் ஓல்டு டவுன் பகுதியைச் சோ்ந்த முருகேசன் மகன் ரஜினி. இவா் பிரபல தனியாா் நிதி நிறுவன வேலூா் கிளை அலுவலகத்தில் கடன்தொகை வசூல் செய்யும் பிரிவின் நிா்வாகியாக பணியாற்றி வந்தாா்.

இவா் பணியில் சோ்ந்தது முதல் வாடிக்கையாளா் கள் 14 பேரிடம் இருந்து வசூலித்த ரூ.13 லட்சத்து 12 ஆயிரத்து 884 தொகையை நிறுவனத்தின் கணக்கில் செலுத்தாமல் மோசடி செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, நிதிநிறுவனத்தின் கிளை மேலாளா் கிரண் குமாா் அளித்த புகாரின்பேரில் வேலூா் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளா் சாரதி, காவல் ஆய்வாளா் காந்திமதி ஆகியோா் நடத்திய விசாரணையைத் தொடா்ந்து மோசடியில் ஈடுபட்டதாக ரஜினி, அவரது மனைவி பாக்கியலட்சுமி ஆகிய இருவரையும் செவ்வாய்க்கிழமை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினா். தொடா்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

X
Dinamani
www.dinamani.com